இந்திய அணி வங்கதேசத்தை 97 ரன்கள் எடுத்து வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சினாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். திலக் வர்மா, ரவி பிஸ்னோய், ஷபாஸ் அகமத் , அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக விளையாடியது. திலக் வர்மா கவனத்துடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்களும், கெயிக்வாட் 40 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால், தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வெற்றி மூலம் இந்தியா பதக்கம் பெறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“