ஆசிய தடகள போட்டி: 2019-ம் வருடத்திற்கான ஆசிய தடகளப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடந்து வருகிறது.
போட்டியின் இரண்டாவது நாளான நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து கலந்துக் கொண்டார்.
அவர், 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 வினாடியில் கடந்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார். அதோடு தடகள வரலாற்றில் மிகச் சிறந்த ஓட்டத்தையும் கோமதி வெளிப்படுத்தினார்.
திருச்சியைச் சேர்ந்த இவர் கலந்துக் கொண்ட மூன்றாவது சர்வதேச போட்டியிலேயே தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்தப் போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்க பதக்கமும் இது தான்.
தவிர, ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.