Advertisment

ஆசிய கோப்பை  ஹாக்கி தொடர்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி

சென்னையில் தொடங்கி உள்ள ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கியின் முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல்கணக்கில் இந்திய அணி சீன அணியை வென்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hockey

Hockey India

சென்னையில் தொடங்கி உள்ள ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கியின் முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல்கணக்கில் இந்திய அணி சீன அணியை வென்றது.

Advertisment

ஆசிய சாம்பியன்ஸ்  கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியின் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா என்ற நாடுகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா அணிகளுக்கான நேற்றைய ஆட்டம் இரவு தொடங்கியது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 6 கோல்கள் அடித்தது. சீனா அணி 2 கோல்கள் அடித்தது. ஆட்டத்தின் 2ம் பாதியில் மேலும் ஒரு கோல் அடித்த இந்திய அணி வெற்றி பெற்றது.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் தலா 4 இடங்களை  பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment