Advertisment

ஆசியக் கோப்பை ஹாக்கியில் அசத்திய தமிழகத்தின் கார்த்தி செல்வம்: யார் இந்த புதிய ஹீரோ?

மலேசியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2 கோல்களை அடித்து மிரட்டினார் தமிழக வீரர் கார்த்தி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asian Champions Trophy: Tamil Nadu Hockey player Karthi Selvam Tamil News

கார்த்தி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹாக்கி திறமைகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆஃப் எக்ஸலன்ஸ், கோவில்பட்டியின் முதல் பேட்ச்களில் ஒருவர் ஆவார்.

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 3 முறை சாம்பியனான பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி, ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

Advertisment
publive-image

தமிழக வீரர் கார்த்தி

இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி செல்வம் களமாடினர். உள்ளூர் மக்களின் முன்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மலேசியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2 கோல்களை அடித்து மிரட்டினார். சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். அவரது இந்த ஆட்டம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்த கார்த்தி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹாக்கி திறமைகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆஃப் எக்ஸலன்ஸ், கோவில்பட்டியின் முதல் பேட்ச்களில் ஒருவர். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முதலில் இந்திய ஜூனியர் அணியில் விளையாடினர்.

இதன்பின்னர் அவரது தாக்குதல் திறமைக்காக இந்தியாவின் அப்போதைய பயிற்சியாளர் கிரஹாம் ரீடால் அவரை விரைவிலே இந்திய சீனியர் அணிக்கு அழைத்துக்கொண்டார். அவர் 2023 ஹாக்கி உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றாலும், அவரது கம்பீரமான ஃபினிஷிங் டச் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடிக்க உதவியது. தற்போது சாம்பியன் வலம் வரும் அவரது படிப்படியான வளர்ச்சி அவரைப் பின்தொடர மிகவும் உத்வேகத்தை அளிக்கிறது.

publive-image

'தி பிரிட்ஜ்' இதழ் உடனான அவரது சமீபத்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு:-

"தமிழ்நாட்டு மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த கைதட்டல்களில் என்னை இழக்காமல் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பது எனக்குத் தெரியும், எங்கள் அணியில் அடிக்கடி விவாதிக்கப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று.

நான் ஹாக்கி விளையாடவில்லையென்றால், என் வாழ்க்கையை நடந்த எதாவது ஒரு வேலைகளைச் செய்ய வேண்டி இருந்திருக்கும். அதுதான் நான் இந்தியா அணி இடம் பிடிக்க வேண்டும் என்ற எனது இலக்கைத் துரத்துவதில் என்னை மேலும் உறுதியாக்கியது." என்று கார்த்தி செல்வம் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment