Asian Championship : ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்க பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நேற்று (23.4.19) _தொடங்கியது.வருகிற 28-ந்தேதி வரை இந்தத் தொடர் நடக்கிறது.சீனாவில் ஸியாங் நகரில் நடைப்பெற்று வரும் இந்த தொடரில் இந்தியா சார்பில் பஜ்ரங் புனியா உட்பட பல வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.இதில் ஆண்கள் ஃப்ரீ ஸ்டைல், பெண்கள் மல்யுத்தம், கிரேகோ - ரோமன் ஸ்டைல் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான பஜ்ரங் புனியா ஆண்கள் ஃப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் சயாட்பெக் ஒகாஸ்சோவ்-யை எதிர்கொண்டார். அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 12-1 என்ற பள்ளிக்கணக்கில் வீழ்த்தி புனியா இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் இறுதி போட்டி கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை நடைப்பெற்றது.
இந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் சயாட்பெட் ஓகஸ்ப்ஸாவை 12-7 என்ற புள்ளிக்கணக்கில் புனியா வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆரம்ப சுற்றில் 2-5 புள்ளிகள் புனியா பின் தங்கி இருந்தார். பின்பு இரண்டாவது சுற்றில் புஜகல பலத்துடன் களம் இறங்கிய பஜ்ரங் புனியா அசாத்தியமாக ஆடி கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜகார்த்தார் ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டிகளிலும் புனியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கத்தது. அதே போல் ஆடவர் 79 கிலோ எடைப்பிரிவில் பிரவின் ராணா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 97 பிரிவில் சத்யவத் கடியன் வெண்கல பதக்க கைப்பற்றியுள்ளார்.
இன்று மாலை மீண்டும் தொடங்கும் ஆட்டத்தில் வினேஷ் போகத் பெண்கள் 53 கி.கி., பிரிவில் பங்கேற்கிறார். அதே போல நவ்ஜோத் கவுட் 65 கி.கி., எடைப்பிரிவிலும், பூஜா தாண்டா 57 கி.கி., எடைப்பிரிவிலும் பங்கேற்கின்றனர்.