Asian Continental Chess Championship Tamil News: ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவின் எட்டாவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா, கவுஸ்டாவ் சாட்டர்ஜியை வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தார். மேலும், 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்றுள்ள பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
இந்த தொடரில், ஐந்து வீரர்கள் – ஹர்ஷ பரதகோடி, எஸ்எல் நாராயணன், பி அதிபன் மற்றும் கார்த்திக் வெங்கடராமன் (அனைத்து இந்தியா) – மற்றும் ஷம்சிதீன் வோகிடோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆறு புள்ளிகளுடன் உள்ளனர். கிராண்ட்மாஸ்டர் பரதகோடியை 30 நகர்த்தல்களில் வோகிடோவ் டிரா செய்தார்.
மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் - பதக்கத்தை அள்ளிய தமிழக வீரர்கள்...
கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil