Asian Games 2018 Day 12 Updates: இந்தியாவுக்கு 12வது தங்கம்! ஜின்சன் ஜான்சன் அபாரம்!

Asian Games 2018 Day 12 Updates

Asian Games 2018 Day 12 Updates

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asian Games 2018 Day 12 Live Updates Live

Asian Games 2018 Day 12 Updates: 8-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.

நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நேற்றைய 11ம் நாள் போட்டி முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 54 பதக்கம் பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

Asian Games 2018 Live Streaming Day 12 அப்டேட்ஸ் இங்கே,

06.05 IST - ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சான் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியாவின் தங்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது.

05.50 IST - இன்று நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 6-7 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.

05.40 IST - வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்

03.00 IST - பெண்களுக்கான வட்டு எறிதல், இந்திய நேரப்படி இன்று மாலை 5.10 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சீமாபுனியா, குமாரி சந்தீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 5.50 மணிக்கும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 6.05 மணிக்கும் நடக்கிறது. இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் மோனிகா சவுத்ரி மற்றும் மஞ்ஜித்சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் 6.50 மணிக்கும், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணி பங்கேற்கிறது.

02:00 IST - பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, சுனையா குருவல்லா தன்விகன்னா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும், ஹரிந்தர்பாலசாந்து, ரம்ஜித் தண்டன், மகேஷ் மன்கோகர், சவுரவ் கோ‌ஷல் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம் ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கலம் உறுதியானது. ஏற்கனவே ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் 3 வெண்கலம் கிடைத்து இருந்தது. அரை இறுதியில் பெண்கள் அணி ஆங்காங்கையும், ஆண்கள் அணி மலேசியாவையும் இன்று சந்திக்கின்றன.

குத்துச்சண்டை போட்டியில் 4 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு நுழைந்தனர். இதனால் 2 வெண்கல பதக்கம் உறுதியாகியுள்ளது.

Asian Games

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: