Asian Games 2018 Day 13 Live Updates: 8-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Asian Games 2018 Live Streaming Day 13 அப்டேட்ஸ் இங்கே,
05:10 pm : ஆண்கள் லைட் ஃபிளை 49கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில், இந்தியாவின் அமித் பங்கல், அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளார். அடுத்து நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இவர் வெற்றிப் பெற்றால், 2018 ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் ஒரே இந்திய பாக்ஸர் எனும் பெயரைப் பெறுவார்.
03:00 pm : இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன் 75 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் உடற்தகுதி பெறவில்லை.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிரிஷனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காலிறுதியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், விகாஸ் கிரிஷன் அரையிறுதியில் பங்கேற்பதற்கு மருத்துவ ரீதியாக உடற்தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்ட விகாஸ் கிரிஷன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
02:00 pm : இன்று மாலை 06.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்தியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெற்றால், இந்திய அணி தங்கம் வெல்லும்.
01:10 pm : பெண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.
இதில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது.