ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 :
18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வருகிறது.ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளன.
Asian Games 2018 Day 3 Live updates :
04.45 pm: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-2 என தோல்வியைத் தழுவியது. இருப்பினும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். அதன்படி இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
2.00 pm : துப்பாக்கிச் சூடு போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற சஞ்சீவ் ராஜ்புட்டிற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1.00 pm : ஆண்களுக்கான 50மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சூடு போட்டியில், இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற சஞ்சீவ் ராஜ்புட்
11.30 am : 16 வயதான செளரப் சவுத்ரி சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
11.00 am : 3 ஆவது நாளான இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் செளரப் சவுத்ரி தங்கப் பதக்கமும், அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கடந்த சனிக்கிழமை (18.8.18) ஜகார்த்தாவில் பிரம்மாண்ட தொடக்கவிழாவுடன் ஆரம்பித்தது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்தியாவின் பதக்க வேட்டையை 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் கலப்பு பிரிவில் விளையாடிய ரவிக்குமார், அபூர்வி சந்தேலா தொடங்கி வைத்தனர். இந்த இணை வெண்கலப்பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா முதல் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.
இரண்டாம் நாளான திங்கட்கிழமை அன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதை அடுத்து நடந்த டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் 19 வயதேயான வீரர் லக்சய் சியோரன், வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். 43 முறை பறக்கும் இலக்கை சரியாக சுட்டு அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மகளிர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஜப்பானின் யமகுஷியை 21க்கு18,21க்கு19 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.அதேவேளையில் சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார். ஆடவர் அணி கபடிப் போட்டியில், இந்தியாவை தென்கொரியா தோற்கடித்தது.
திங்களன்று நடைப்பெற்ற கிலோ எடைப்பிரிவு மகளிர் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகத் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். ஜப்பானின் யுகி இரியை 6க்கு2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
தற்போது நிலவரம் வரை இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடம் வகித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலத்துடன் மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது