Asian Games 2018 Day 3, Asian Games 2018 Medal Tally: ஆசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் லைவ் அப்டேட்களை இங்கு காணலாம். இந்திய வீரர்கள் பெறும் வெற்றி, தோல்விகள் இங்கு பட்டியல் இடப்படுகின்றன.
ஆசிய நாடுகள் பங்கேற்கும் பெரிய விளையாட்டுத் திருவிழா, ஆசிய விளையாட்டுப் போட்டி! இந்த ஆண்டு (2018) இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் சீனா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியா, தைவான், ஈரான் ஆகிய நாடுகள் அடுத்தகட்டத்தின் நின்று போராடுகின்றன.
Asian Games 2018 LIVE UPDATES: ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4-வது நாளான இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறும் நிகழ்வுகளின் லைவ் அப்டேட்ஸ்:
6:30 PM: ஆண்களுக்காக குங்பூ 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சந்தோஷ்குமார் வெண்கலம் வென்றார். வியட்னாமின் புயி-யிடம் இவர் தோற்றார்.
6:00 PM: பெண்களுக்காக குங்பூ 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெண்கலம் வென்றார். சீனாவின் சாய் இன்ஜியிங்-டம் ரோஷிபினா தேவி தோற்றார்.
5:30 PM: துப்பாக்கி சுடுதலில் இன்று இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்த ரஹி சர்னோபட், 2016-ம் ஆண்டு முழுக்க முழங்கை காயம் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவர்! அவரை பற்றிய முழு விவரம் அறிய இங்கே, ‘க்ளிக்’ செய்யவும்.
5:00 PM: டென்னிஸில் இந்தியாவின் சுமித் சகல் - ராம்குமார் ராமநாதன் ஜோடி உஸ்பெகிஸ்தான் இணையிடம் டைபிரேக்கரில் தோல்வியை தழுவியது.
4:00 PM: ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த விதத்தில் 86 ஆண்டு கால சாதனையை இந்திய ஹாக்கி அணி முறியடித்தது. பழைய சாதனையும் இந்தியா வசமே இருந்தது.
3:30 PM: பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரஹி சர்னோபட் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ரஹி என்பது குறிப்பிடத்தக்கது!
Asian Games 2018 Live: பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரஹி சர்னோபட் தங்கம் வென்றார்.
3:00 PM: இந்தியா ஹாக்கியில் 26-0 என ஹாங்காங்கை வீழ்த்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது சாதனை! சர்வதேச அளவில் 39-0 என சாதனை பதிவாகியிருக்கிறது.
2:30 PM; கிரிஸோ-ரோமன் 87 கிலோ பிரிவு வ்ரெஸ்ட்லிங் போட்டியில் இந்தியாவின் ஹர்ப்ரீத்சிங், உஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்காம் அஸகாலோவிடம் அரை இறுதிப் போட்டியில் 10-0 என வீழ்ந்தார். எனினும் வெண்கலப் பதக்கத்திற்கான வாய்ப்பில் அவர் நீடிக்கிறார்.
1:40 PM: ஹாங்காங்கிற்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் முதல் பாதியில் இந்திய அணி 14-0 என முன்னிலை வகித்து தனது வலிமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. லலித் 2 கோல்கள், மன்பிரீத், மன்தீப் 2 கோல்கள், அமித் ரோஹின்தாஸ், ஹர்மன்பிரீத், வருண் ஆகியோரும் கோல் அடித்தனர்.
1:00 PM: கிரீஸோ-ரோமன் பிரிவு (77 கிலோ) வ்ரெஸ்ட்லிங்-கில் இந்திய வீரர் குர்பிரீத் சிங், தாய்லாந்து வீரர் அபிச்சாய் நடாலை டெக்னிக்கல் சுப்பீரியாரிட்டி முறையில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
கிரீஸோ-ரோமன் 130 கிலோ பிரிவில் இந்திய வீரர் நவீன், சீன வீரரிடம் தோல்வியை தழுவினார்.
12:30 PM: வில் வித்தையில் இன்று காலையில் இந்திய பெண்கள் அணியும், பிற்பகலில் ஆண்கள் அணியும் போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் பிற்பகலில் இந்திய ஆண்கள் அணியும், மாலை 5 மணிக்கு பெண்கள் அணியும் பங்கு பெறுகின்ற போட்டிகள் நடக்கின்றன.
மதியம் இந்தியா-ஹாங்காங் இடையிலான ஃபீல்ட் ஹாக்கி நடக்கிறது. துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டிகளில் பங்கு பெறுவதால், இன்று இந்தியாவுக்கு பதக்கம் உறுதி. நீச்சல் போட்டி, டேக்வாண்டோ, டென்னிஸ், வாலிபால், வ்ரெஸ்ட்லிங், வ்ஷூ உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.