Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 6வது நாளான இன்று நடைபெற்ற ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதி சுற்றில் இந்திய அணி அதிரடியாக செயல்பட்டது. இதில், அர்ஜுன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் சிவா நார்வால் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியின் முதல் தொடரில், அர்ஜுன் 97 புள்ளிகள், சிவா 92 புள்ளிகள், சரப்ஜோத் சிங் 95 புள்ளிகள் பெற்றனர்.
தொடர்ந்து, அடுத்தடுத்த தொடரில், இந்திய அணி மொத்தம் 1,734 புள்ளிகளை வென்றுள்ளது. தங்க பதக்கமும் தட்டி சென்றுள்ளது. போட்டியில், சீனா வெள்ளி பதக்கமும், வியட்னாம் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. போட்டியில், சரப்ஜோத் சிங் 580 புள்ளிகள், அர்ஜுன் 578 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 5-வது மற்றும் 8-வது இடம் பிடித்து தனிநபர் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Asian Games 2023 Live
வுஷூ
வுஷூ மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் தேவி தங்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
முதல் சுற்றில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வூ வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றிலும் வூ வெற்றி பெற்றார் என நடுவர் அறிவித்த நிலையில், இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வெண்கலம் வென்ற நிலையில், தற்போது அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.
5-வது இடத்தில் இந்தியா
இன்று 6-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“