Asian-games: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ருதுஜா போசெல் இணை சீன தைபே வீரர்களை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில் சீன தைபேவை 2-6, 6-3, 10-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ருதுஜா போசெல் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் பதக்கம் வென்றது. இந்நிலையில், இன்று ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் களம் இறங்கிய மகேஷ் மன்கோனகர் ஒரு செட்டில் கூட வெற்றி பெறாமல் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். எனவே, அடுத்து வந்த இரண்டு வீரர்களுக்கும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சவாலான கட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரரான சவுரவ் கோஷல், பாகிஸ்தான் வீரரை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பெ ற்றார். தொடர்ந்து களமாடிய அபய் சிங், முதல் செட்டில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து இரண்டு செட்களிலும் தோல்வி அடை ந்தார். இதனால், இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், அபய் சிங் கடைசி இரண்டு செட்களிலும் அபா ர ஆட்டத்தை வெளிப்படுத்தினா ர். குறிப்பாக கடைசி செட் 10-10 என்று இருந்த போதும் அபய் சிங் விடா முயற்சியுடன் போராடி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதன்மூலம், இந்திய அணி 2-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.
குத்துச் சண்டையில் பதக்கம் உறுதி
குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிரீத்தி கஜகஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி 4-1 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை யை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பிரீத்தி குத்துச்சண்டை பெ ண்கள் 50-54 கிலோ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி சுற்றுக்குள் முன்னேறியுள்ளதால் பிரீத்திக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதுபோல் 75 கிலோ பிரிவில் லோவ்லினா போர்கோஹெய்ன் பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். மேலும் அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி
துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா. திவ்யா - சரப்ஜோத் இணை 14 - 16 புள்ளிக் கணக்கில் சீனாவிடம் தங்க பதக்கத்தை தவறவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“