Indian-cricket-team | asian-games | ruturaj-gaikwad: சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது.
டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, என மொத்தம் 13 அணிகள் களமாடியுள்ளன. இந்த அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் நேரடியாக காலிஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
காலிஇறுதிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனிடையே, லீக் சுற்று போட்டிகள் நடக்கிறது. இந்த சுற்றில் மீதமுள்ள 9 அணிகள் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா அணிகளும், பி பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளும், சி பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்தியா மோதும் போட்டி
ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட்டில் இந்தியா அணி நேரடியாக காலிறுதியில் விளையாடுகிறது. அதன்படி, இந்திய அணியின் போட்டி அக்டோபர் 3ம் தேதி நடக்கிறது. இந்தியா பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டு 2023 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆன்லைனில் சோனி செயலில் பார்க்கலாம்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய கிரிக்கெட் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“