Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 12-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா - இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி மற்றும் பர்னீத் ஆகியோர் அடங்கிய அணி இந்தோனேசியாவின் ரைத் பத்லி, ஷியாகரா கோருனிசா மற்றும் ஸ்ரீ ரண்டி ஆகியோரை 233-219 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
ஆங்கிலத்தில் படிக்க: Asian Games 2023 Live Updates, Day 12
இந்த நிலையில், வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் பிரிவில் இந்திய அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி சீன தைபே அணியை 230-228 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்தியா 82வது பதக்கம் வென்றுள்ளது. மேலும் 18வது தங்கத்தையும் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“