Asian-Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் 50 குழு பிரிவில் ஜோரவர் சிங் சந்து, கினான் செனை, பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி குவைத் மற்றும் சீனாவை விட முந்தி 361 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
இந்த அணியில் தமிழக வீரரான பிருத்வி ராஜ் தொண்டைமான் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:- Asian Games 2023 Live Updates, Day 8
வெள்ளி வென்ற பெண்கள் அணி
துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிராப் 50 குழு பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் மணீஷா கீர், பிரீத்தி ராஜக், குமாரி ராஜேஷ்வரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
கோல்ப் - வெள்ளி வென்ற அதிதி அசோக்
கோல்ப் பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். 271 புள்ளிகள் பெற்ற அதிதி அசோக் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வெ ன்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“