Advertisment

ஆசிய விளையாட்டு ஆக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி

ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது

author-image
WebDesk
New Update
Hockey India

ஆசிய விளையாட்டு போட்டி : ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் ஜப்பான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

Advertisment

2023-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ந் தேதி சீனாவின் ஹாங்சோவில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி பி. பிரிவில் 2-வது இடம் பிடித்த தென்கொரியா அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில்,  ஹர்திக் சிங் 5-வது நிமிடத்தில் கோல் அடித்து இந்திய அணியை முன்னிலைபடுத்தினார்.

தொடர்ந்து 11வது நிமிடத்தில் மன்தீப் சிங், 15-வது நிமிடத்தில் லலித்குமார்,  24-வது நிமிடத்தில் அமித்ரோஹிதாஸ்,  54-வது நிதிடத்தில் அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதற்கு பதிலடியாக 17, 20, மற்றும் 42 என தென்கொரியா ஹாட்ரிக் கோல் அடித்திருந்தாலும் இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்திய ஜப்பான் இறுதிப்போட்டிக்கு முன்னுறியது. இந்தியா ஜப்பான் ஆகிய இரண்டு அணிகளும் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நிலையில், லீக் சுற்றில் இந்திய ஜப்பான் அணியை தோற்கடித்திருந்தது. இதனிடையே ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஹாக்கி அணி,  முதல் பாதியில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-ம் பாதி ஆட்டத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஹர்மன்பிரீத் சிங் இரண்டு பெனால்டி கார்னர்களையும் கோலாக மாற்றிய நிலையில், அமித்ரோஹிதாஸ், அபிஷேக் மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் 4-வது தங்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணி அடுத்து 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மேலும் சென்னையில் நடைபெற்ற ஆசியகோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில்,  இந்தியா 5-0 என்ற கணக்கில் ஜப்பன் அணியை வீழ்த்தியதை தொடர்ந்து தற்போது மீண்டும் தோற்கடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment