Advertisment

ஆசிய விளையாட்டு கபடி: இந்தியா மோதும் போட்டிகள் முழு விவரம்; 'லைவ்' பார்ப்பது எப்படி?

ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது 8வது முறை பட்டம் வெல்ல தீவிரமாக தயாராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Kabaddi Live Streaming For Asian Games 2023

ஆசிய விளையாட்டு கபடி போட்டிகளை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

Asian-games 2023 | Kabaddi Live Streaming: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டிகள் நாளை திங்கள்கிழமை (அக்டோபர் 2 ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளன. இப்போட்டிகள் ஹாங்சோவில் உள்ள ஜியோஷன் குவாலி விளையாட்டு மையத்தில் நடக்கிறது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மோதுகின்றன. 

Advertisment

ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு ஆடவர் போட்டியின் கால அளவு 45 நிமிடங்களாகவும், பெண்களுக்கான போட்டிகள் 35 நிமிடங்களாகவும் இருக்கும். இரு பிரிவுகளிலும் பங்கேற்கும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆரம்ப கட்டத்தில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும். 

இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவார்கள், தோல்வியுற்றவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான இரண்டு இறுதிப் போட்டிகளும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடப்பு சாம்பியனாக ஈரான் அணி உள்ளது. 2018ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா - பாலேம்பாங் நகரில் நடந்த 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈரான் அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் களமாடிய ஈரானின் பாஸல் அட்ராச்சலி மற்றும் முகமது எஸ்மாயில் நபிபக்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் நடப்பு தொடரிலும் களமாடுகிறார்கள். 

ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? 

ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது 8வது முறை பட்டம் வெல்ல பவன் செஹ்ராவத் தலைமையிலான இந்திய ஆடவர் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதேவேளையில், இந்திய பெண்கள் கபடி அணி 2010 முதல் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அவர்களும் 3வது தங்கம் வெல்ல ஆவலுடன் உள்ளார்கள். 

ஆசிய விளையாட்டு போட்டி கபடி நிகழ்வுகளுக்கான குழு பிரிவு:-

ஆண்கள்:

குழு ஏ - இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே

குழு பி –  ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா

பெண்கள்:

குழு ஏ – இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு

குழு பி - வங்கதேசம், நேபாளம், ஈரான்

இந்திய ஆண்கள் கபடி அணி: 

நிதேஷ் குமார், பர்வேஷ் பைன்ஸ்வால், சச்சின், சுர்ஜித் சிங், விஷால் பரத்வாஜ், அர்ஜுன் தேஷ்வால், அஸ்லாம் இனாம்தார், நவீன் குமார், பவன் செஹ்ராவத், சுனில் குமார், நிதின் ராவல், ஆகாஷ் ஷிண்டே

இந்திய பெண்கள் கபடி அணி: 

அக்ஷிமா, ஜோதி, பூஜா, பூஜா, பிரியங்கா, புஷ்பா, சாக்ஷி குமாரி, ரிது நேகி, நிதி ஷர்மா, சுஷ்மா சர்மா, சினேகல் பிரதீப் ஷிண்டே, சோனாலி விஷ்ணு ஷிங்கட்

ஆண்கள் கபடி போட்டிக்கான அட்டவணை

அக்டோபர் 2, திங்கள்-ஜப்பான் vs வங்கதேசம் - காலை 6:00

அக்டோபர் 2, திங்கள் - தாய்லாந்து vs சீன தைபே - காலை 7:00

அக்டோபர் 2, திங்கள் - ஈரான் vs பாகிஸ்தான் - காலை 11:30

அக்டோபர் 2, திங்கள்-மலேசியா vs கொரியா- பிற்பகல் 12:30 

அக்டோபர் 3, செவ்வாய்-இந்தியா vs வங்கதேசம்-காலை 6:00

அக்டோபர் 3, செவ்வாய் - சீன தைபே vs ஜப்பான் - காலை 7:00

அக்டோபர் 3, செவ்வாய் - மலேசியா vs ஈரான் - காலை 11:30

அக்டோபர் 3, செவ்வாய்-பாகிஸ்தான் vs தென் கொரியா-பிற்பகல் 12:30

அக்டோபர் 4, புதன்-இந்தியா vs தாய்லாந்து - காலை 6:00 மணி

அக்டோபர் 4, புதன்-சீன தைபே vs வங்கதேசம்  - காலை 7:00

அக்டோபர் 4, புதன்-ஈரான் vs தென் கொரியா - காலை 11:30

அக்டோபர் 4, புதன்–மலேசியா vs பாகிஸ்தான்–12:30 PM

அக்டோபர் 5, வியாழன்-தாய்லாந்து vs ஜப்பான்-காலை 7:00

அக்டோபர் 5, வியாழன்-இந்தியா vs சீன தைபே - காலை 8:00

அக்டோபர் 5, வியாழன்-வங்கதேசம் vs தாய்லாந்து - பிற்பகல் 12:30

அக்டோபர் 5, வியாழன்-ஜப்பான் vs இந்தியா - பிற்பகல் 1:30

அக்டோபர் 6, வெள்ளி- முதலாவது அரை இறுதி- பிற்பகல் 12:30 -வெண்கலப் பதக்கம்

அக்டோபர் 6, வெள்ளி - 2வது அரை இறுதி - பிற்பகல் 2-1:30 - வெண்கலப் பதக்கம்

அக்டோபர் 6, வெள்ளி-இறுதிப் போட்டி - பிற்பகல் 12:30 - தங்கப் பதக்கம்

பெண்கள் கபடி போட்டிக்கான அட்டவணை 

அக்டோபர் 2, திங்கள்-வங்கதேசம் vs நேபாளம்-காலை 8:00

அக்டோபர் 2, திங்கள்-இந்தியா vs சீன தைபே - பிற்பகல் 1:30

அக்டோபர் 2, திங்கள் - தாய்லாந்து vs தென் கொரியா - பிற்பகல் 2:20

அக்டோபர் 3, செவ்வாய்-நேபாளம் vs ஈரான்-காலை 8:00

அக்டோபர் 3, செவ்வாய் - தென் கொரியா vs இந்தியா - பிற்பகல் 1:30

அக்டோபர் 3, செவ்வாய் - சீன தைபே vs தாய்லாந்து - பிற்பகல் 2:20

அக்டோபர் 4, புதன்-ஈரான் vs வங்கதேசம் - காலை 8:00

அக்டோபர் 4, புதன்-இந்தியா vs தாய்லாந்து - பிற்பகல் 1:30

அக்டோபர் 4, புதன்-தென் கொரியா vs சீன தைபே - பிற்பகல் 2:20

அக்டோபர் 6, வெள்ளி- முதலாவது அரை இறுதி - காலை 7:00 - வெண்கலப் பதக்கம்

அக்டோபர் 6, வெள்ளி- 2வது அரை இறுதி – காலை 7:50 –வெண்கலப் பதக்கம்

அக்டோபர் 7, சனி– இறுதிப் போட்டி –காலை 7:00–தங்கப் பதக்கம்

ஆசிய விளையாட்டு 2023 கபடி போட்டிகள் எந்த தேதியில் விளையாடப்படும்?

ஆசிய விளையாட்டு 2023 கபடி போட்டிகள் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும்.

ஆசிய விளையாட்டு 2023 கபடி போட்டிகள் எங்கு நடைபெறும்?

ஆசிய விளையாட்டு 2023 கபடி சீனாவின் ஹாங்சோ  நகரில் உள்ள ஜியோஷன் விளையாட்டு மையத்தில் நடைபெறும்.

ஆசிய விளையாட்டு 2023 கபடி போட்டிகளை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?

2023 ஆசிய விளையாட்டு கபடி போட்டிகளை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

ஆசிய விளையாட்டு 2023 கபடி போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங்கில் எப்படி பார்ப்பது?

2023 ஆசிய விளையாட்டு கபடி போட்டிகளை இந்தியாவில் சோனிலைவ் (SonyLIV) செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Asian Games
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment