Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 147 தங்கம், 81 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 270 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
33 தங்கம், 44 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 122 பதக்கங்களுடன் ஜப்பான் 2ம் இடத்தில் உள்ளது. 31 தங்கம், 39 வெள்ளி, 63 வெண்கலம் என மொத்தம் 133 பதக்கங்களுடன் கொரியா 3ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன தைபே 12 தங்கம், 10 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது. அந்த நாடு இந்தியாவை முந்த இன்னும் 2 தங்கப் பதக்கம் மட்டுமே தேவை. அதேவேளையில், 11 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் இந்தியாவை முந்த 3 தங்கப் பதக்கம் தேவை. போட்டிகள் நிறைவைய இன்னும் 2 வாரம் உள்ளதால் இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்று நம்பலாம்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில், இந்தியா 70 பதக்கங்களை வென்றது. அதில் 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்கள் ஆடம் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“