Advertisment

Asian Games Medals Tally: 107 பதக்கத்துடன் ஆசிய விளையாட்டை நிறைவு செய்த இந்தியா; இதுவரை இல்லாத புதிய சாதனை

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கியது.

author-image
WebDesk
New Update
India Kabaddi

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் மொத்தம் 107 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ள இந்திய அடுத்து 2024-ல் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளது.

Advertisment

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கியது. இந்த போடடிக்கான இந்திய அணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் களமிறங்கியது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பலரும் பதங்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள் (முதல்முறையாக 100-க்கு மேல்) என்ற என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

போட்டியின் இறுதி நாளான நாளை (அக்டோபர் 8) நடக்கும் எந்த போட்டியிலும் இந்தியாவில் இருந்து எந்த விளையாட்டு வீரரும் பங்கேற்காத நிலையில், இந்தியா தனது ஆசிய விளையாட்டு போட்டிக்கான பயணத்தை இன்னுடன் முடித்துக்கொண்டது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற 107 பதக்கங்கள் தேசத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

அடுத்து 2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் அதிகபட்ச பதங்கள் வெல்லும் வரை ஹாங்சோவில் இந்தியாவின் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கல பதக்கம் பெரிதாக பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

நேற்று (அக் 6) 95 பதக்கங்களைத் தொட்ட இந்திய அணி இன்று (அக் 07) உறுதிசெய்யப்பட்ட சில பதக்கங்களுடன், ஆச்சரியப்படும் விதமாக, இந்திய வீரர்கள் தங்கள் கடைசி நாளில் 12 பதக்கங்களைக் கைப்பற்றினர். இதில் ஆறு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கமாகும்.

இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை

1951 - 15 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் - மொத்தம்: 51

1954 - 5 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் - மொத்தம்: 17

1958 - 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் - மொத்தம்: 13

1962 - 10 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் - மொத்தம்: 33

1966 - 7 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் - மொத்தம்: 21

1970 - 6 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் - மொத்தம்: 25

1974 - 4 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் - மொத்தம்: 28

1978 - 11 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம் - மொத்தம்: 28

1982 - 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் - மொத்தம்: 57

1986 - 5 தங்கம், 9 வெள்ளி, 23 வெண்கலம் - மொத்தம்: 37

1990 - 1 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் - மொத்தம்: 23

1994 - 4 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் - மொத்தம்: 23

1998 - 7 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் - மொத்தம்: 35

2002 - 11 தங்கம். 12 வெள்ளி. 13 வெண்கலம் - மொத்தம்: 36

2006 - 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலம் - மொத்தம்: 53

2010 - 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் - மொத்தம்: 65

2014 - 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் - மொத்தம்: 57

2018 - 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் - மொத்தம்: 70

2023 - 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் - மொத்தம்: 107

இந்திய ஆடவர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் அசத்திய நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் மீண்டும் வெற்றி பெற்று அசத்தியது. 2018-ம் ஆண்டு ஜாகர்தாவில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தோல்வியை சந்தித்து. இளம் வில்வீரர் ஓஜாஸ் டியோட்டேல் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் ஆண்கள் கூட்டு மற்றும் தனிநபர் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். வில்வித்தை வீராங்கனை ஜோதி வெண்கலம் வென்றார். இதன் மூலம் அதிக பதக்கம் பெற்ற நாடுகள் பட்டியலில் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைத் தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தை பெற்றுள்ளது.

51 பதக்கங்களை பங்களித்த (துப்பாக்கி சுடும் வீரர்கள் (22) மற்றும் தடகள தடகள வீரர்களின் (29 பதக்கங்கள்) இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒரு அற்புதமான நிகழ்வை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல் இந்திய அணி ஆச்சரியமளிக்கும் வகையில் பல பதக்கங்களை வென்றது, பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் அணியில் சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் கடைசி 30 மீட்டர் ஓட்டத்தில் பாருல் சவுத்ரியின் பரபரப்பான ஓட்டமும் நீண்ட காலம் நினைவில் இருக்கும், மீரட் வீராங்கனை ஜப்பானின் ரிரிகா ஹிரோனகாவை ஃபினிஷிங்கில் சாய்த்து தங்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவின் 86.77 மீ எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ராவை சிறிது காலத்திற்கு முன்னிலைப்படுத்தியது மற்றொரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார், அதே நேரத்தில் ஜெனா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஆடவர் இரட்டையர் 1000 மீட்டரில் அர்ஜுன் சிங் மற்றும் சுனில் சிங் சலாம் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Asian Games
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment