Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 8ம் நாளான இன்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மகளிர் ஹெப்டத்லானில் வெண்கலம் வென்ற நந்தினி அகசரா ஒரு திருநங்கை என்றும், போட்டியில் 4-ம் இடம் பிடித்த தனக்கு வெண்கலம் பதக்கம் தரவேண்டும் என சக இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/94a6a72e-688.jpg)
மகளிர் 800 மீ ஹெப்டத்லான் விளையாட்டில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 'வெண்கலம் வென்ற நந்தினி ஒரு திருநங்கை என்பதால் விதிப்படி எனக்குதான் பதக்கம் தர வேண்டும் என இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீது சக வீராங்கனை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது இந்திய வீரர் - வீராங்கனைகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“