Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 5வது நாளான இன்று நடைபெற்ற போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அகியோர் கொண்ட இந்திய அணி 1,759 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
சீனா அணி 1756 புள்ளிகள் எடுத்த நிலையில், இந்தியா மொத்தமாக 1759 ரன்களுடன் முடித்தது. நாள் முடிவில் (தகுதியின் துல்லியமான நிலை) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்த மனு பாக்கர், ரேபிட் ஸ்டேஜில் தனது அற்புதமான சுடுதலை தொடர்ந்தார். அவர் மொத்தமாக 590 புள்ளிகளைக் குவித்தார். இஷா சிங் 586 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்தார். அதே சமயம் ரிதம் சங்வானும் 583 ரன்களுடன் 7வது இடத்தில் இருந்தார்.
பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதே நேரத்தில் ரிதம் சங்வான் ஒரு நாட்டிற்கு இருவர் என்ற நிபந்தனையின் காரணமாக தவறவிட்டார். இந்நிலையில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார். மனுபாக்கர் 5-வது இடத்தை பிடித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க:- Asian Games 2023 Day 4 Live
துப்பாக்கிசுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
50மீ ரைபிள் 3 பொசிஷன் மகளிர் தனி நபர் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
துப்பாக்கிசுடுதலில் வெண்கலம்
முன்னதாக, துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, மணினி கவுசிக், ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றனர்.
படகு போட்டியில் தமிழக வீரருக்கு பதக்கம்
தமிழக வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்றார் படகு போட்டியில் (sailing) ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
6-வது இடத்தில் இந்தியா
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் நீடித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“