Asian Games: ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
அதாவது, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் இந்தியா வென்ற 16 தங்கப் பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டது.
லைட்வெயிட் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ்: அரவிந்த் சிங் மற்றும் அர்ஜுன் லால் ஜாட் ஆகியோர் வெள்ளி வென்றனர். சீனா முதல் இடம் பிடித்தது.
10 மீ ஏர் ரைபிள் அணி பெண்கள்: ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் இந்தியாவுக்கான துப்பாக்கிச் சுடுதலைத் தொடங்கினர். இதில், ரமிதா மற்றும் மெஹுலி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.
Asian Games: Tracking all of India’s medal winners at Hangzhou 2023
படகுப் போட்டி (8 பேர்): சீனா முதலிடம் பிடித்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ், நரேஷ் கல்வானியா, நீதிஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஷ் மற்றும் தனஞ்சய் உத்தம் பாண்டே ஆகியோர் கொண்ட அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
படகுப்போட்டி (2 பேர்): படகுப் போட்டி இருவர் பிரிவில் பாபு லால் யாதவ் மற்றும் லெக் ராம் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இவர்களுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கிச் சூடுதல் ஏர் ரைபிள் 10 மீட்டர்: ரமீடா ஜிண்டால் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“