Advertisment

ஆசிய கபடி: ஃபைனலுக்கு முன்னேறிய இந்தியா; பவன் ஷெராவத் அபாரம்

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரானை 33-28 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asian Kabaddi Championship 2023: india beat Iran, reach final Tamil News

கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி, மொத்த புள்ளிகளில் 16 புள்ளிகளை இந்தியாவுக்காக சேர்த்தார்.

Asian Kabaddi Championship 2023 Tamil News: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா - ஈரான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈரானை 33-28 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisment
publive-image

முதல் அரைநேர ஆட்டத்தின்போது, இந்தியா 19-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. எனினும், நடப்பு ஆசிய போட்டிகளுக்கான சாம்பியனான ஈரான் அணி மீண்டு வந்து, அதிரடியாக விளையாட தொடங்கியது. ஆனால், போட்டி நிறைவடைய 30 வினாடிகள் இருந்தபோது, இந்திய அணியின் அர்ஜுன் தேஷ்வால் 2 புள்ளிகளை கைப்பற்றினார். இதன்மூலம், இந்தியா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

publive-image

இந்த போட்டியின்போது, அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி, மொத்த புள்ளிகளில் 16 புள்ளிகளை இந்தியாவுக்காக சேர்த்தார். இதனால், இந்திய அணி தொடக்கம் முதல் முன்னிலை வகித்தது. இந்திய அணி தொடரின் தொடக்கத்தில் இருந்து, ஜப்பான், கொரியா மற்றும் சீன தைபே ஆகிய அணிகளை அடுத்தடுத்து வரிசையாக வீழ்த்தி மிரட்டல் ஃபார்மில் இருந்தது. இந்த நிலையில், நடப்பு சாம்பியன் ஈரானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இந்திய அணி இறுதி போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, அதே அணிக்கு எதிராக அதே நாளில் இறுதி லீக் போட்டியிலும் விளையாடுகிறது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Sports Pro Kabaddi Iran South Korea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment