Advertisment

ஃபைனலிலும் அசத்திய பவன் ஷெராவத்: தோல்வியே காணாமல் ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 8 முறை வென்று வரலாறு படைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asian Kabaddi Championship 2023: India wins title, Highlights in tamil

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரான் அணியை 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Asian Kabaddi Championship 2023  Tamil News: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – ஈரான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் அசத்தலாக விளையாடினர்.

Advertisment
publive-image

முதல் அரைநேர ஆட்டத்தின்போது, இந்தியா 23-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், நடப்பு ஆசிய போட்டிகளுக்கான சாம்பியனான ஈரான் அணி தொடர்ந்து சரிவைக் கண்டது. எனினும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. ஈரான் அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றியது.

ஆனால், இந்திய அணி அதன் ஆதிக்கத்தை தொடரவே, ஈரான் அணியை 42-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றி மூலம் சாம்பியன் பட்டத்தை இந்தியா வாகை சூடியது. மேலும், ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 8 முறை வென்று வரலாறு படைத்தது.

publive-image

இந்திய அணி தொடரின் தொடக்கத்தில் இருந்து, ஜப்பான், கொரியா மற்றும் சீன தைபே ஆகிய அணிகளை அடுத்தடுத்து வரிசையாக வீழ்த்தி மிரட்டல் ஃபார்மில் இருந்தது. இந்த நிலையில், நடப்பு சாம்பியன் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியிலும் வழக்கம் போல் கேப்டன் பவன் ஷெராவத் அசத்தலாக விளையாடினார்.அவர் எடுத்த சூப்பர் 10 புள்ளிகள், அஸ்லாம் இனாம்தார் மற்றும் அர்ஜுன் தேஷ்வால் எடுத்த புள்ளிகள் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

publive-image

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 பரிசு

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தங்கப் பதக்கமும், தோல்வி கண்ட ஈரான் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. 5 போட்டிகளில் 3ல் வென்ற சீன தைபே வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Sports Pro Kabaddi Iran South Korea
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment