worldcup 2023 | england-cricket-team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரப்பராக அரங்கேறிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஆப்கானிஸ்தான். அந்த அணி விரித்து போட்ட சுழல் வலையில் சிக்கித் தவித்த இங்கிலாந்து அணி ரன்கள் சேர்க்க போரடியாது. ஹாரி புரூக் (66 ரன்) மற்றும் டேவிட் மாலன் (32 ரன்) ஆகியரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றம் கொடுத்தனர். பந்துவீச்சில் மிரட்டி எடுத்த ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை சாய்த்த ஆப்கானிஸ்தானுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றியை 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் ருசித்துள்ளது.
வைரல் ட்வீட்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி பெறும் என்பதை கணித்த ஜோதிடர் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமித் பஜாஜ் எனும் அந்த ஜோதிடர் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் தள பதிவில், ஆப்கானிஸ்தான் 'ஆச்சரியத்தை' உருவாக்கலாம். ஆனால் 'இங்கிலாந்து இறுதியில் வெல்லும்' என்று கணித்தார்.
இருப்பினும், போட்டி தொடங்கிய சில நிமிடங்களில், தனது ட்வீட்டுக்கு பதிலளித்த அவர் ஆப்கானிஸ்தானை 'லேசாக' எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து அணியை எச்சரித்து இருந்தார். "ஆப்கானிஸ்தானுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இது சிறந்த வாய்ப்பு என்றாலும், ஜோதிட ரீதியாக இங்கிலாந்துக்கு ஆப்கானிஸ்தானுக்கு நட்சத்திரங்களின் ஆதரவு குறைவாக இருப்பதால், அவர்கள் விளையாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தலாம் மற்றும் இறுதியில் இங்கிலாந்து வெல்லும்!" என்று ஜோதிடர் சுமித் பஜாஜ் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவுக்கு பதிலளித்த அவர், "இங்கிலாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தானை இன்று இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது." என்று பதிவிட்டார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரது கணிப்புகளை பாராட்டி அதை 'அற்புத கணிப்பு' மற்றும் 'சிறந்த கணிப்பு' என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
English players should not take Afghanistan lightly atleast Today#AfgVsEng #ENGvsAFG
— Sumit Bajaj (Astrologer) (@astrosumitbajaj) October 15, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.