Athiya Shetty Muhurtham ceremony kanchivaram silk saree Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்தத் திருமணம் நடந்த நிலையில், புதுமண தம்பதி கே.எல்.ராகுல் – அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டனர். அவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offerஇந்நிலையில், நடிகை அதியா ஷெட்டி முஹூர்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களும் இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில் அவர் சாதாரண கையால் நெய்யப்பட்ட தங்க நிற காஞ்சிவரம் பட்டுப் புடவையை அணிந்திருப்பதைக் காணலாம். இந்த புடைவைகள் 1096 ஆம் ஆண்டு ஆர்ட் ஆஃப் லிவிங்கில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வியை ஆதரிக்கும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டத்திற்கு உதவி வருகிறது. மேலும், இந்தப் பட்டின் விலை சில லட்சங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அனார்கலியை உருவாக்க 19 ஆம் நூற்றாண்டின் ஸ்வாட்ச்கள் மற்றும் உத்வேகங்கள் எடுக்கப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டது. ராஜஸ்தானின் அரச குடும்பங்கள் தூய பருத்தியில் கோட்டா எம்பிராய்டரி கொண்ட ஆடைகளை அலங்கரிப்பதாக அறியப்பட்டது. இந்த உத்வேகத்தை எடுத்துக்கொண்டு, வங்காளத்தின் ஃபுலியாவின் கைவினைஞர்களால் நெய்யப்பட்ட பருத்தி மஸ்லின் 200 எண்ணிக்கையைப் பெற்றோம். ஒரு சிலரே இந்த மரபைச் செயல்படுத்த எஞ்சியுள்ளனர். கிட்டத்தட்ட 2000 மணிநேரம் எடுத்துக்கொண்ட சிக்கலான கை எம்பிராய்டரி, இந்த மாம்பழ வடிவங்களை உருவாக்க, பழங்காலத்திலிருந்தே கோதாவை நசுக்கி கையால் மடிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil