தொழில்முறை டென்னிஸ் பிளேயர்ஸ் அசோசியேஷனில் (பி.டி.பி.ஏ) புதிய விதி வகுக்கப்பட்டுள்ள நிலையில், கருத்து மோதல் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த புதிய விதியை மேற்கோள் காட்டி முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் ஏடிபி டென்னிஸ் வீரர்கள் கவுன்சில் தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
யு.எஸ். ஓபனுக்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் பிரிந்த பி.டி.பி.ஏ அசோசியேஷன் தற்போது செர்பியர்களால், ஒன்றமைக்கப்பட்டு, வீரர் கவுன்சிலின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவது என கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட தயாராக செர்ப்பியவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் "துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
வீரர் தேர்தல்களைச் சுற்றி மோதல் மற்றும் நியாயமற்ற தன்மை உருவாகி வருவதால், சிக்கல்களை உருவாக்க நான் விரும்பவில்லை என்றும் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். மேலும் பி.டி.பி.ஏ விளையாட்டில் ஆளும் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஜோகோவிச் பல முறை கூறிய நிலையில், தற்போது, "பி.டி.பி.ஏவுடன் போரிடுவதை விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் ஏடிபி பி.டி.பி.ஏசங்கத்தை எவ்வாறுபார்க்கும் என்பது தெளிவாக இல்லை" என்று ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பி.டிபி.ஏ- ஐ உருவாக்கும் முடிவுக்கு முன்னணி டென்னிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர் மற்றும் ரஃபா நடால் ஆகியோர் தங்களர் எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"