Bangladesh vs Australia World Cup 2019 Live Score: சபாஷ்.. சரியான போட்டியென்று சொல்ல வைத்திருக்கிறது உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.20) நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டி.
நாட்டிங்கம் நகரின் டிரண்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், டாப் அணிகளையும் அசால்ட்டாக டீல் செய்து வரும் வங்கதேசமும் மோதுகின்றன. கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கை, 41.3வது ஓவரிலேயே, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, 'ஆஸி., யார்கர் ஸ்பெஷலிஸ்ட் மிட்சல் ஸ்டார்க்கை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை' என்று வங்கதேச டாப் பெர்ஃபார்மர் ஷகிப் அல் ஹசன் கூறியிருப்பது, ஆஸ்திரேலியர்களை சற்றே காண்டாக்கி இருக்கிறது. 'அவ்வளவு அதுப்பா உனக்கு?' என்று கேட்காத குறை தான்..
ஆஸ்திரேலியா - வங்கதேசம் போட்டியின் டாஸ், இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போடப்பட்டு, ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஆட்டத்தை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியை கண்டு ரசிக்கலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் காணலாம்.