ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இன்று (நவ.8) மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில், ஆஸி., 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்று, டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டும் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 11.5வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்து, பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்து வெளியேற்றியது. வார்னர் 35 பந்துகளில் 48 ரன்களும், ஃபின்ச் 36 பந்துகளில் 52 ரன்களும் விளாசினர்.
இதில், வார்னர் 6 ரன்கள் எடுத்திருந்த போது, ஆஃப் சைடில் அடித்த பந்தை மின்னல் வேகத்தில் பாய்ந்து இமாம் உல் ஹக் தடுத்து நிறுத்தினர். இப்படியொரு அட்டகாசமான பீல்டிங்கை, சமீபத்திய காலங்களில் பாக்., கிரிக்கெட்டில் நாம் பார்த்திருக்க முடியாது.
8, 2019
வார்னர் அடித்தவுடன், எப்படியும் யாரும் தடுக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்னவோ, எதிர் முனையில் இருந்த ஃபின்ச் பாதி தூரம் ஓடிவிட்டார்.
ஆனால், மிக கடினமாக பீல்டிங் செய்து பந்தை அட்டகாசமாக தடுத்த இமாம் , ஃபின்ச்சை ரன் அவுட் செய்யும் எளிதான வாய்ப்பை கோட்டைவிட்டார்.