உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸி., அணி அறிவிப்பு; இந்திய பயணத்தில் இடம்பெற்ற 4 பேர் நீக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், பாா்டா் – காவஸ்கா் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், பாா்டா் – காவஸ்கா் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Australia name squad for WTC final and Ashes Tests Tamil News
Australia announce squad for ICC WTC final against India Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுவது வழக்கம். அவ்வகையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Advertisment
ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியையும், ஆஷல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணிகளுக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
4 பேர் நீக்கம்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்து. இதில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடருக்கான அணியில் இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில் அவருக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும், மீண்டும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடருக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். கேமரூன் கிரீனின் பேக்-அப் வீரராக இங்கிலாந்தில் பிறந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.
பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் மாட் குஹ்னெமன் போன்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்படும் மாறுபட்ட சூழ்நிலைகள் இருந்தபோதிலும், ஆஃப் ஸ்பின்னர் டோட் மர்பி, இந்தியாவில் தனது முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, நாதன் லியானுக்கு பேக்-அப் வீரராக அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துள்ளார்.
Will this Australia squad be able to win the #WTC23 Final and conquer England in the Ashes? 🤔