Defending champions Australia are now out of the World Cup 2022 Tamil News
News about T20 WC 2022 - Australia in tamil: 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தொடரில் அரையிறுதிக்கு முன்னேற துடிக்கும் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
Advertisment
நடப்பு டி-20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இதில், குரூப் 1ல் உள்ள அணிகளுக்கான சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைபெற்ற நிலையில், அந்த குழுவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில், புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன், +2.113 என்ற நெட் ரன்ரேட்டுடன் முதலாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன், +0.473 என்ற நெட் ரன்ரேட்டுடன் 2வது இடத்திலும் உள்ளன. குழுவில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இலங்கை அணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடப்பு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன.
கோப்பை கனவோடு வந்த ஆஸ்திரேலியா… அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேற்றம்
டி-20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, அதை எடுத்து நடத்திய நாட்டு அணியும், முந்தைய பதிப்பில் வென்ற அணி அடுத்த பதிப்பில் வென்றதாக சரித்திரம் கிடையாது. அந்த வரலாற்றை நடப்பு டி-20 உலகக் கோப்பையை எடுத்து நடத்தி வரும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மாற்றி எழுதும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அரையிறுதிக்குள் நுழையவே திண்டாடிய ஆஸ்திரேலியா அணி தற்போது தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.