இந்தியாவில் உலககோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம் ஆப் ஸ்பின்னர் அஸ்வின் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது சுழலை சமாளிக்க அவரைப்போலவே பந்துவீசும் மகேஷ் பித்தியாவை ஆஸ்திரேலியா அணி வலை பந்துவீச்சாளராக அழைத்திருந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
13-வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் சுழற்பந்துவீச்சார் அஸ்வினுக்கு இடம்பெற்றுள்ளார். இதனிடையே இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8-ந் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என்பதால் அஸ்வின் ஆதிகம் செலுத்த வாய்ப்புள்ளது.
இதனிடையே உலககோப்பை வார்ம் அப் போட்டிகளுக்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் அஸ்வின் சுழலை சமாளிக்கும் வகையில் அவரை போல் பந்துவீசும் மகேஷ் பித்தியாவை வலை பந்துவீச்சாளராக அழைத்துள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு வலைபந்துவீச்சாளராக செயல்பட்ட மகேஷ் பித்தியா தற்போது இந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களாக வார்னர் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க திணறி வருவதால் அவரை அச்சில் வார்த்தார் போல் பந்து வீசும் திறன் படைத்த மகேஷ் பித்தியாவை வலை பந்துவீச்சாளராக வைத்துக்கொண்டால் நல்ல பயிற்சியாக அமையும் என்று என்று நினைத்தது ஆஸ்திரேலியா அணி. அதற்கு ஏற்றார்போல் மகேஷ் பித்தியாவும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அதே சமயம், இந்திய அணியில் அஸ்வினின் இடம் உறுதியாகாமல் இருந்த நேரத்திலேயே ஆஸ்திரேலியா அணி மகேஷ் பித்தியாவை குறிவைத்து அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர் உள்ளூர் சீசனில் பரோடா அணிக்கு விளையாடி வருவதால் ஆஸ்திரேலியா அணியில் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். சர்வதேச அணியுடன் இணைவது நல்ல அனுபவமாக இருந்தாலும், எதிர்வரும் உள்ளூர் தொடரில் கவனம் செலுத்துவதால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். பரோடா அணிக்காக விளையாடுவது தான் எனது விருப்பம் என்று மகேஷ் பித்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“