ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக மூத்த வீரர் அஸ்வினுடன் இளம் 3 வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ-ன் 3 முக்கிய கல்வி உதவித்தொகை திட்டங்கள்: விவரம் உள்ளே
ஐ.பி.எல்-லின் 13வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்கும். இதற்கான வீரர்கள் குழு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில், விராட் கோலி, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல் ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், சகா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குதீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
ஒரு நாள் போட்டியில், விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், கே.எல் ராகுல் (துணைக்கேப்டன்), ஷ்ரேயஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
டி-20 போட்டியில், விராட் கோலி, தவான், மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் (துணைக் கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி,தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை: இன்னும் கொரோனா குறையாத மாவட்டங்கள் பட்டியல்
இவர்களுடன் கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் படி, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் என 3 இளம் தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது, கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”