Advertisment

AUS vs AFG highlights: மேக்ஸ்வெல் அதிவேக இரட்டை சதம்; ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
 Australia vs Afghanistan Live Score updates World Cup 2023 in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

worldcup 2023 | Australia vs Afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs Afghanistan Live Score, World Cup 2023

டாஸ் வென்ற ஆப்கான் பேட்டிங் - ஆஸி., பவுலிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரஹ்மத் ஷா தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் இப்ராஹிம் ஜத்ரான் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். சுமார் 17 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய ரஹ்மத் ஷா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார். 

ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடி வந்த அந்த ஹஷ்மதுல்லா ஷாஹிதி மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார். 

ஆப்கானிஸ்தான் அணி 42.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தபோது, 18 பந்துகளில் 22 ரன் அடித்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஜாய், ஆடம் ஜம்பாவின் பந்தில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ஹு, மொஹம்மது நபி பேட்டிங் செய்ய வந்தார். இவர் வந்த வேகத்திலேயே ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரஷித்கான் பேட்டிங் செய்ய வந்தார். 

இதனிடையே மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜத்ரான் 131 பந்துகளில் 101 ரன் குவித்து சதம் அடித்தார்.  இவருக்கு ஜோடியாக விளையாடிய ரஷித்கான் அதிரடியாக வானவேடிக்கை நிகழ்த்தி ரன் குவித்தார். 

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. இதன் மூலம், 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் நவீன் உல் ஹக் பந்தில் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மிட்செல் மார்ஷ் பேட்டிங் செய்ய வந்தார். 

அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 24 ரன்கள் அடிட்திருந்த நிலையில், நவீன் உல்ஹக் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து மார்னர் லபுசேன் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆஸ்திரேலியா அணி 8.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்த நிலையில், மிகவும் நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 29 பந்துகளில் 18 ரன் எடுத்திருந்தபோது, அஸ்மதுல்லா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பேட்டிங் செய்ய வண்த ஜோஷ் இங்லிஸ், அஸ்மதுல்லாவின் அடுத்த பந்தில் இப்ராஹிம் ஜத்ரானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து கிளேன் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார்.

மிகவும் நிதானமாக விளையாடிய லபுசேன் 28 பந்துகளில் 14 ரன் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ரஷித் கான் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செயவ வந்தார். இவரும், 3 ரன் மட்டும் எடுத்து ரஷித் கான் பந்தில் ஐக்ரம் அலிகில் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அடுத்து, பேட் கம்மின்ஸ் பேட்டு செய்ய வந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய கிளென் மேக்ஸ் வெல் தனி ஆளாகப் போராடி 76 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல், 128 பந்துகளில் 201 ரன் குவித்து அதிவேக இரட்டை சதம் அடித்தார். கிளென் மேக்ஸ்வெல் தனி ஆளாகப் போராடி ஆஸ்திரேலியா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:-

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வி கண்டது. அதன் பிறகு இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக வென்றது. தற்போது 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இன்னும் ஒரு வெற்றியை ருசித்தால் அரைஇறுதியை உறுதி செய்து விடும் நிலையில் உள்ளது.

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அந்த அணி 4 வெற்றி (இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து), 3 தோல்வியுடன் (வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து) 6-வது இடத்தில் இருக்கிறது. சாம்பியன் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ள ஆப்கானிஸ்தான் தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Australia vs Afghanistan Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment