Advertisment

மிட்சல் மார்ஷ் அதிரடி சதம்... கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை 10:30 மணிக்கு புனேயில் தொடங்கிய 43-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Australia vs Bangladesh Live Score updates World Cup 2023 Pune in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதல்

Worldcup 2023 | australia vs bangladesh: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. 

Advertisment

மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு புனேயில் தொடங்கிய 43-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs Bangladesh Live Score, World Cup 2023

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் - வங்கதேசம் பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் - லிட்டன் தாஸ் ஜோடி களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் தலா 36 ரன்களை எடுத்த தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்து வெளியேறினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 45 ரன்களுக்கு அவுட் ஆனார். 

களத்தில் இருந்த மஹ்முதுல்லா - தவ்ஹித் ஹ்ரிடோய் ஜோடி களத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மஹ்முதுல்லா 32 ரன்னில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 21 ரன்னுக்கு அவுட் ஆனார். அரைசதம் விளாசி அதிரடி காட்டிய தவ்ஹித் ஹ்ரிடோய்  74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்னுக்கும், நசும் அகமது 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் அணி 306 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

தொடர்ந்து 307 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 2 பவுண்டரியை விரட்டிய ஹெட் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த டேவிட் வார்னர - மிட்செல் மார்ஷ் ஜோடியில், மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். வார்னர் 52 பந்துகளில் அரைசதம் அடித்தார். தனது அதிரடியை தொடர்த்திருந்த அவர் 53 ரன்னில் அவுட் ஆனார்.  இதன்பிறகு மிட்செல் மார்ஷ் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்த நிலையில், மிட்செல் மார்ஷ் 87 பந்துகளில் அதிரடியான சதத்தை விளாசினார். 

இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீச்செல் மார்ஷ் 132 பந்துகளில் 17 பவுண்டரி 9 சிக்சருடன் 177 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் 

வங்கதேசம்

தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Australia Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment