scorecardresearch

புதிய சரித்திரம் படைக்க வாய்ப்பு: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி Live Updates

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் இங்கே

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெற்ற மோசமான தோல்வியை மறக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது இங்கிலாந்து. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,  முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1974-75க்குப் பின், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிகெட் தொடரை வென்றது கிடையாது.

2013-14-ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 எனவும், 2010-11-ல் 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-6 எனவும் இழந்திருந்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி சிட்னியில் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ் இங்கே..

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Australia vs england 3rd odi live cricket score