/indian-express-tamil/media/media_files/2025/03/04/asnElpzjXpNtEGgjZ5iB.jpg)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Australia vs India, Champions Trophy 2025 Semi-Final Highlights: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடந்த முதல் அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக கூப்பர் கான்னோலி - டிராவிஸ் ஹெட் ஜோடி களம் புகுந்தனர். தங்களது அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் கூப்பர் கான்னோலி ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, Semi-Final Champions Trophy 2025
இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி அமைத்தார். இதில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த மார்னஸ் லாபுஷாக்னே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உடன் ஜோடி அமைக்க, இருவரும் 15 ஓவர்களுக்கு மேல் நிதானமாக மட்டையை சுழற்றி ரன்களை எடுத்து வந்தனர்.
ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியை விரட்டிய மார்னஸ் லாபுஷாக்னே 29 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா சுழலில் சிக்கி எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே, தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய கேப்டன் ஸ்மித் 96 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, Semi-Final Champions Trophy 2025
இதையடுத்து, களத்தில் அலெக்ஸ் கேரி - க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி அமைத்தனர். இவர்களில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அக்சர் பந்தில் போல்ட்-அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த பென் துவர்ஷூயிஸ் 19 ரன்னுக்கு அவுட் ஆனார்.
களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான த்ரோவில் சிக்கி ரன்-அவுட் ஆனார். அவர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழக்கவே, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 264 ரன்கள் எடுத்தது. அதனால் இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டையும், ஜடேஜா, வருண் தலா 2 விக்கெட்டையும், அக்சர், குலதீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, Semi-Final Champions Trophy 2025
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்திய அணி துரத்தியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகி த் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமாடினர். இதில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி விரும்பிய கில் 8 ரன்னுக்கு அவுட் ஆனார். ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியை விரட்டிய ரோகித் 28ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு ஜோடி அமைத்த விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரில் நட்சத்திர வீரரான கோலி 53 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 75-வது அரைசதம் ஆகும். மறுமுனையில் 3 பவுண்டரிகளை விரட்டிய ஷ்ரேயாஸ் 45 ரன்னுக்கு அவுட் ஆனார்.
அவருக்குப் பின் களம் புகுந்த அக்சர் 27 ரன்னுக்கு அவுட் ஆனார். 98 பந்துகளில் 5 பவுண்டரிகளை விரட்டி அணி மிடில் ஓவர்களில் நிலையாக இருக்க உதவிய கோலி 84 ரன்னில் அவுட் ஆனார். அவர் சதம் அடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவர் ஆட்டமிழந்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, களத்தில் இருந்த கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடியில், 3 சிக்ஸரை பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டினார் ஹர்திக். 28 ரன்கள் எடுத்த அவர், இந்தியா வெற்றிக்கு 13 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த ராகுல் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.
11 பந்துகளை மிச்சம் வைத்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. அத்துடன், 2023 ஒருநாள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்தற்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்த சிறப்பாக ஆடிய கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
நாளை பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் பலபரீட்ச்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் -09) அரங்கேறும் இறுதிப் போட்டியில் மோதும்.
-
Mar 04, 2025 21:40 IST
ஆஸி.,-யை பந்தாடிய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நிலையில், 48.1-வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
Mar 04, 2025 21:34 IST
இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 5ரன்கள் தேவை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 21:27 IST
இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 18 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 21:23 IST
இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 27 ரன்கள் தேவை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 24 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 21:17 IST
இந்தியாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 28 ரன்கள் தேவை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 30 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 21:16 IST
இந்தியாவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 36ரன்கள் தேவை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் கே.எல். ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 36 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 21:10 IST
அதிரடியாக ஆடிய கோலி அவுட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. களத்தில் தனது சிற்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்திய கோலி 84 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் சதம் விளாசுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூழலில் அவர் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
-
Mar 04, 2025 20:55 IST
40 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் விராட் கோலி - ஜோடி கே.எல். ராகுல் ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 60 பந்துகளில் 65 ரன்கள் மட்டுமே தேவை.
-
Mar 04, 2025 20:42 IST
37 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் விராட் கோலி - ஜோடி கே.எல். ராகுல் ஜோடி ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 20:26 IST
ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. களத்தில் ஆடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Mar 04, 2025 20:03 IST
கோலி அரைசதம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. களத்தில் ஆடி வரும் இந்திய நட்சத்திர வீரரான கோலி 53 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 75-வது அரைசதம் ஆகும்.
-
Mar 04, 2025 20:02 IST
25 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 19:51 IST
21 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது களத்தில் விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 19:15 IST
11 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களான களமாடிய கில் 8 ரன்னுக்கும், ரோகித் 28 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். தற்போது களத்தில் விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 18:53 IST
தொடக்க ஜோடியை காலி செய்த ஆஸி., - இந்தியா நிதான பேட்டிங்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கிய நிலையில், கில் 8 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 18:44 IST
3 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகி த் சர்மா - சுப்மன் கில் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 18:43 IST
இந்தியா பேட்டிங் இனிதே ஆரம்பம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில், இந்திய அணி 265 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகி த் சர்மா - சுப்மன் கில் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
-
Mar 04, 2025 18:14 IST
பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்தியா... 264 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக கூப்பர் கான்னோலி - டிராவிஸ் ஹெட் ஜோடி களம் புகுந்தனர். தங்களது அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் கூப்பர் கான்னோலி ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி அமைத்தார். இதில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த மார்னஸ் லாபுஷாக்னே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உடன் ஜோடி அமைக்க, இருவரும் 15 ஓவர்களுக்கு மேல் நிதானமாக மட்டையை சுழற்றி ரன்களை எடுத்து வந்தனர்.
ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியை விரட்டிய மார்னஸ் லாபுஷாக்னே 29 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா சுழலில் சிக்கி எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே, தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய கேப்டன் ஸ்மித் 96 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, களத்தில் அலெக்ஸ் கேரி - க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி அமைத்தனர். இவர்களில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அக்சர் பந்தில் போல்ட்-அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த பென் துவர்ஷூயிஸ் 19 ரன்னுக்கு அவுட் ஆனார்.
களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான த்ரோவில் சிக்கி ரன்-அவுட் ஆனார். அவர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழக்கவே, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 264 ரன்கள் எடுத்தது. அதனால் இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டையும், ஜடேஜா, வருண் தலா 2 விக்கெட்டையும், அக்சர், குலதீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
-
Mar 04, 2025 17:51 IST
48 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் நாதன் எல்லிஸ் - ஆடம் ஜம்பா ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 17:49 IST
அலெக்ஸ் கேரி ரன் அவுட்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் சிறப்பான ஆடி வந்த அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Mar 04, 2025 17:35 IST
45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் அலெக்ஸ் கேரி - பென் துவர்ஷூயிஸ் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 17:19 IST
41 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் அலெக்ஸ் கேரி - பென் துவர்ஷூயிஸ் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 17:10 IST
அதிரடி காட்ட முயன்ற மேக்ஸ்வெல் அவுட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. கேப்டன் ஸ்மித் விக்கெட்டுக்குப் பின் களம் புகுந்த க்ளென் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட அதிரடி காட்டினார். அவர் அக்சர் பந்தை விரட்ட முயன்று 7 ரன்னில் போல்ட் -அவுட் ஆகி வெளியேறினார்.
-
Mar 04, 2025 17:03 IST
தனி ஒருவனாக போராடி வந்த ஸ்மித் அவுட்... ஆஸி., மேலும் பின்னடைவு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் இருந்த கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். அவரது தனது சிறப்பான வெளிப்படுத்தி வந்த நிலையில், 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
Mar 04, 2025 16:54 IST
35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் (71) - அலெக்ஸ் கேரி (29) ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 16:46 IST
34 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - அலெக்ஸ் கேரி ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 16:25 IST
ஜோஷ் இங்கிலிஸ் அவுட்... சுழலில் மிரட்டி எடுக்கும் ஜடேஜா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் இருந்த கேப்டன் ஸ்மித் - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடியில், 11 ரன்கள் எடுத்த ஜோஷ் இங்கிலிஸ் ஜடேஜா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
-
Mar 04, 2025 16:23 IST
ஸ்மித் அரைசதம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் ஆடி வரும் ஸ்மித் 67 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
-
Mar 04, 2025 16:19 IST
26 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 16:15 IST
மார்னஸ் லாபுஷாக்னே அவுட்... மிரட்டி எடுக்கும் சுழல் மன்னன் ஜடேஜா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் ஆடி வந்த கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடியில், 29 ரன்கள் எடுத்த நிலையில் மார்னஸ் லாபுஷாக்னே ஜடேஜா சுழலில் சிக்கி வெளியேறினார்.
-
Mar 04, 2025 16:01 IST
ஸ்மித்துக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. இதில் அக்சர் படேல் வீசிய 14வது ஓவரில் ஸ்மித்தின் ஸ்டம்ப்பில் பந்து பட்டும் பெயில்ஸ் விழவில்லை. இதனால் 23 ரன்களில் அவுட் ஆவதில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தப்பினார்
-
Mar 04, 2025 16:00 IST
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:52 IST
18 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:41 IST
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:31 IST
12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:23 IST
10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:21 IST
9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் கேப்டன் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:20 IST
அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் அவுட்... சுழல் ஜாலத்தில் கலக்கும் வருண் சக்ரவர்த்தி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. களத்தில் அடி வந்த டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்மித் ஜோடியில், டிராவிஸ் ஹெட் வருண் சக்ரவர்த்தி வீசிய 8.2-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக ஆடி வந்த அவர் 39 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Mar 04, 2025 15:16 IST
8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்மித் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:04 IST
6 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்மித் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 15:00 IST
5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்மித் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 14:56 IST
4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்மித் ஜோடி ஆடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
-
Mar 04, 2025 14:55 IST
தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா... ஆஸ்திரேலியா நிதான பேட்டிங்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனொலி - டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமாடிய நிலையில், கூப்பர் கோனொலி ஷமி பந்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
-
Mar 04, 2025 14:16 IST
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் துவர்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா.
இந்தியா: ரோகி த் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
-
Mar 04, 2025 14:14 IST
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் - இந்தியா பவுலிங்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனால், இந்தியா பவுலிங் போடுகிறது. இப்போட்டியானது 2:30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
-
Mar 04, 2025 14:11 IST
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 சேனல்களில் போட்டி ஒளிபரப்பப்படும். ஆன்லைனில் இந்தப் போட்டியை ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
-
Mar 04, 2025 13:42 IST
இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல் எப்போது, எங்கு நடக்கிறது?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மதியம் 2 மணிக்கு போடப்படும். இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
-
Mar 04, 2025 13:41 IST
அரைஇறுதி மோதல்
லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் முடிவடைந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.
மேலும், பாகிஸ்தானின் லாகூரில் நாளை புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
-
Mar 04, 2025 13:39 IST
சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடந்தது என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஏ பிரிவில் இருந்த வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதேபோல், 'பி' பிரிவில் இருந்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளன.
-
Mar 04, 2025 13:32 IST
'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையப் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.