Advertisment

IND vs AUS T20 Highlights: ஆஸி-யை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா; இங்கிலாந்துடன் மோத ரெடி

T20 World Cup | விளையாட்டு: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில், 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா தித்திப்பான வெற்றியை பதிவு செய்தது.

author-image
WebDesk
New Update
Australia vs India live score t20 world cup 2024 match 51 today IND vs AUS latest scorecard updates in tamil

டி20 உலகக்கோப்பை தொடர், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.

India vs Australia Score, T20 World Cup 2024 Match Today: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திங்கள் கிழமை நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia Live Score, T20 World Cup 2024

இந்திய மண்ணில் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில், அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 92, சூர்யகுமார் 31, ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 25, 2024 00:16 IST
    181 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா.. 24 ரன்னில் இந்தியா வெற்றி


    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 181 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்னில் தோல்வியை தழுவியது.
    அந்த அணியின் டேவிட் வார்னர் (6), டிராவிஸ் ஹெட் (76), மிட்செல் மார்ஷ் (37), க்ளீன் மேக்ஸ்வெல் (20), மார்க்கஸ் ஸ்டோனிக்ஸ் (2), டிம் டேவி்ட் (15), மாத்தீவ் வேடு (1), பேட் கம்மின்ஸ் (11*) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (4*) ரன்னும் எடுத்து இருந்தனர்.
    இந்திய அணி தரப்பில் அர்தீப் சிங் 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.



  • Jun 24, 2024 22:43 IST
    ஆஸ்திரேலியா ரன்குவிப்பு


    ஆஸ்திரேலியா அணி 7.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 74 பந்துகளில் 124 ரன்கள் தேவை.



  • Jun 24, 2024 22:40 IST
    205 ரன்கள் இலக்கு: ஆஸி வெற்றிக்கு 137 ரன்கள் தேவை


    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அடுத்து ரிஷப் பந்த் 15 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னும், ஷிவம் துபே 28 ரன்னும் எடுத்திருந்தனர். ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆகாமல் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார்.



  • Jun 24, 2024 20:32 IST
    விராத் டக் அவுட்; அதிரடி காட்டும் ரோகித் சர்மா

    விராத் கோலி டக் அவுட் ஆன நிலையில், ரோகித் சர்மா 14 பந்துகளில் 41 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 சிக்ஸர், 2 பவுண்டரி அடங்கும்.



  • Jun 24, 2024 20:31 IST
    விராத் கோலி டக் அவுட்

    விராத் கோலி ஜோஸ் பந்துவீச்சில் டேவிட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 5 பந்துகள் சந்தித்த நிலையில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.



  • Jun 24, 2024 19:47 IST
    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா; பவுலிங் வீச முடிவு

    இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.



  • Jun 24, 2024 18:08 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 



  • Jun 24, 2024 18:03 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 



India Vs Australia T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment