worldcup 2023 | Australia vs Pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: https://indianexpress.com/article/sports/cricket/australia-vs-pakistan-live-score-world-cup-2023-18th-match-today-scorecard-bengaluru-8991383/
டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் - ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமாடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
தங்களது அதிரடியை கைவிடாத இந்த அவ்வப்போது பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டி எடுத்தனர். முகமது நவாஸ் வீசிய 30.4 வது ஓவரில் ஒரு ரன் எடுத்த வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசினார். அடுத்த பந்தை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் பவுண்டரியை துரத்தி 100 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இன்று அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். 32 ஓவர்கள் வரை இந்த ஜோடியை உடைக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் போராடினர். 108 பந்துகளில் 10 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் குவித்த மிட்செல் மார்ஷ் ஷஹீன் அப்ரிடி வீசிய 32.5 வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார். 7 ரன் மட்டுமே எடுத்த ஸ்டீவ் ஸ்மித், உசமா மிர் பந்தில் காட் அண்ட் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்து, மார்கஸ் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்ய வந்தார். மிட்செல் மார்ஷ் அவுட் ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய டேவிட் வார்னர் ஹாரிஸ் ராஃப் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினர். அடுத்து ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஓபனிங் ஜோடி தனது அதிரடி பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை 40 ஓவர்களிலேயே 300 ரன்னுக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்திரேலியே அணி 44.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தபோது, 13 ரன் எடுத்திருந்த ஜோஷ் இங்லிஸ் ஹாரிஸ் ராஃப் பந்தில் முஹம்மது ரிஸ்வான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து லபுசேன் பேட்டிங் செய்ய வந்தார்.
மார்கஸ் ஸ்டோனிஸ் 21 ரன்னில் ஷாஹீன் அஃபிரிடி பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்டர்கள் லபுசேன் 8 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன் எடுத்தது. பேட் கம்மின்ஸ் 6 ரன்னுடனும் ஆடம் ஜம்பா 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டேவிட் வார்னர் 163 ரன், மிட்செல் மார்ஷ் 121 ரன் குவித்து வானவேடிக்கை நிகழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிக்கு 368 ரன் என்ற இமலாய இலக்கை நிர்ணையித்தது.
சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃபிரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம், 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக நிலையாக நின்று விளையாடினார்கள். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியைப் பிரிக்க கடுமையாகப் போராடினார்கள்.
அரைசதம் அடித்த இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வார்னர், மார்ஷ் ஓபனிங் ஜோடி போல, ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் சதம் அடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
பாகிஸ்தான் அணி 21.2 ஓவரில் 134 ரன் எடுத்திருந்தபோது, 61 பந்தில் 64 அடித்திருந்த ஷஃபிக் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தில் கிளென் மேக்ஸ்வெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங் செய்ய வந்தார்.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக நிலையாக நின்று விளையாடினார்கள். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியைப் பிரிக்க கடுமையாகப் போராடினார்கள்.
அரைசதம் அடித்த இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வார்னர், மார்ஷ் ஓபனிங் ஜோடி போல, ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் சதம் அடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
பாகிஸ்தான் அணி 21.2 ஓவரில் 134 ரன் எடுத்திருந்தபோது, 61 பந்தில் 64 அடித்திருந்த ஷஃபிக் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தில் கிளென் மேக்ஸ்வெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங் செய்ய வந்தார்.
பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தபோது, 70 ரன் எடுத்திருந்த இமாம் உல் ஹக், மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, முஹம்மது ரிஸ்வான் பேட்டிங் செய்ய வந்தார்.
பாகிஸ்தான் அணி 26.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்தபோது, 18 ரன் மட்டுமே எடுத்திருந்த பாபர் ஆசம், ஆடம் ஜம்பா பந்தில் பேட் கம்மின்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சாத் ஷகீல் பேட்டிங் செய்ய வந்தார்.
அடித்துவிளையாடிய ஷகீல் 30 ரன் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து இஃப்திகார் அஹமது பேட்டிங் செய்ய வந்தார். இஃப்திகார் அஹமது 26 ரன் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, மொஹம்மது நவாஸ் பேட்டிங் செய்ய வந்தார். இதற்குப் பிறகு, பேட்டர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முஹம்மது 14 ரன்னிலும், உசாமா மிர் (0) டக் அவுட், ஷாஹீன் அஃப்ரிடி (10), ஹசன் அலி (8) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 62 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளையும் ஸ்டோனிஸ், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
உலகக் கோப்பையில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா விளையாடிய 3 ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் அடி வாங்கியது. 3வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா அதை தொடரவே நினைக்கும்.
மறுபுறம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கை) ஒன்றில் தோல்வியும் (இந்தியா) கண்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வர இந்த ஆட்டத்தில் தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
பெங்களூரு ஆடுகளம் எப்படி?
பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி அளவும் சிறியது என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.