துபாயில் நடந்து வரும் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் 142 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் ஆடி வந்த ஆஸ்திரேலியா, 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் 482 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா – ஆரோன் ஃபின்ச் ஜோடி சிறப்பாக விளையாடினார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தனர். ஃபின்ச் 62 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 85 ரன்களும் எடுக்க, எல்லாம் நல்லாத் தான் போயிட்டு இருந்தது.
ஆனால், பிலால் ஆசிஃப் என்ற பாகிஸ்தான் ரைட் ஆர்ம் ஆஃப் பிரேக் ஸ்பின்னர் வந்தவுடன் எல்லாம் தலைகீழ் மாறிப் போனது. அடுத்தடுத்து, விக்கெட்டுகளை அள்ளிய இந்த புதுமுக ஸ்பின்னர், ஆஸி., பேட்ஸ்மேன்களை யோசிக்கவே விடவில்லை. டப்பு டப்புன்னு மேட்சை முடிச்சிட்டு போயிட்டார்.
The super six-wicket haul from @bilalasif2411 was the third best bowling return on Test debut for Pakistan! ????#PAKvAUS #howzstat pic.twitter.com/pyUSyWAkZa
— ICC (@ICC) October 9, 2018
இதனால், ஆஸ்திரேலிய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவாஜா, ஃபின்ச் தவிர மிட்சல் மார்ஸ் தான் அதிகபட்சமாக 12 ரன்கள் அடித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
36 ரன்கள் விட்டுக் கொடுத்த பிலால் ஆசிஃப் 6 விக்கெட்டுகள் அள்ள, முஹம்மத் அப்பாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதோடு ஆஸ்திரேலியா குளோஸ்!.
இதையடுத்து, பாகிஸ்தான் தற்போது இரண்டாம் இன்னிங்சை ஆடிவருகிறது.
ஆனால், இதில் பரிதாபம் என்னவென்றால் பிலால் ஆசிஃப் வயது 33. மிஸ்பா உல்-ஹக் மாதிரி பிரம்மாண்ட லேட்டர் என்ட்ரியாக இருப்பாரோ!!?