ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜார்ஜ் பெய்லியின் விக்கெட் கீப்பரை நோக்கிய பேட்டிங், அவருக்கு எளிதாக ரன் சேர்க்க உதவினாலும், அவருடைய இந்த நூதன பேட்டிங் வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஏழாவது ஷெபீல்ட் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா அணிகள் மோதின.
It gets more complex every time you watch it ????#SheffieldShield #TASvVIC pic.twitter.com/Zi2hh5i3JD
— cricket.com.au (@cricketcomau) October 31, 2019
முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் பேட்டிங் செய்த தாஸ்மேனியா அணி முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 226 ரன்கள் எடுத்திருந்தது. விக்டோரியா அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தாஸ்மேனியா தரப்பில் ஐந்தாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் பெய்லி, அவருக்கே உரித்தான அட்டகாச ஸ்டைலில் பேட்டிங் செய்தார்.
போட்டியின் 25வது ஓவரில், கிறிஸ் டிரிமெய்ன் ஓவரில், பெய்லி, ரன்களை விரைவில் எடுப்பதற்காக பவுலர் பந்து வீசுவதற்கு முன்னதாகவே, விக்கெட் கீப்பரை நோக்கி நின்று பந்தை அனசாயமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். இவருடைய பேட்டிங் ஸ்டைல், பார்வையாளர்களை மட்டுமல்லாது, சக வீரர்களையும் பிரமிப்பிற்குள்ளாக்கியது.
ஜார்ஜ் பெய்லி, இதுபோன்ற பேட்டிங் ஸ்டைலை, உள்ளூர் போட்டிகளில் மட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளிலும் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.