ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பநது வீச்சாளராக திகழ்ந்த ஷேன் வார்னே (52) இன்று மரணமடைந்தார்.
தான் தங்கியிருந்த வில்லாவில், சுயநினைவிழந்து கிடந்த அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை வார்னேவின் வார்னின் நிர்வாகம் ஆஸ்திரேலிய ஊடகமான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு உறுதிப்படுத்தியது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வார்னே தான் விளையாடிய காலத்தில் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்ந்தார். 293 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக 300 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடினார்.
வரலாற்றில் மற்ற எந்த பந்துவீச்சாளரையும் விட வார்னே அதிக ஆஷஸ் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“