Advertisment

ஒரே ஓவரில் 6 விக்கெட்... மிரட்டல் சாதனை படைத்த ஆஸி., பவுலர்!

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் காரெத் மோர்கன் ஓவரின் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட்டில் மிரட்டலான சாதனையைப் படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Australian cricketer Gareth Morgan takes six wickets in six balls Tamil News

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர், வங்கதேச வீரர் அல்-அமின் ஹொசைன், இந்தியாவின் அபிமன்யூ மிதுன் ஆகியோர் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

Cricket-news Tamil | australia: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் டிவிசன் 3-ல் சர்பெர்ஸ் பாரடைஸ்- முட்ஜீரபா நேரங் கிளப் அணிகள் மோதின. இதில் 179 ரன் இலக்கை துரத்திய பாரடைஸ் அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவை என்ற நிலையில்  6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன.

Advertisment

இறுதி ஓவரை முட்ஜீரபா நேரங் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான காரேத் மோர்கன் வீசினார். அவரது சுழலில் 6 வீரர்களும் ஒட்டுமொத்தமாக சிக்கி ஆட்டமிழந்தனர். இதில் 4 வீரர்கள் கேட்ச் ஆனார்கள். 2 வீரர்கள் போல்டானார்கள். இதன் மூலம் முட்ஜீரபா நேரங் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் மோர்கன் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். முதல் 4 பந்துகளில் விழுந்த 4 விக்கெட்டுகளும் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தவர்களாவார்கள். கடைசி 2 விக்கெட்டுகள் பவுல்டு முறையில் வீழ்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள் என்று காரெத் மோர்கன் வரலாறு படைத்தார். 

இதற்கு முன்னர் இதுபோன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர், வங்கதேச வீரர் அல்-அமின் ஹொசைன், இந்தியாவின் அபிமன்யூ மிதுன் ஆகியோர் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து ஓவரின் 6 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி அபூர்வ சாதனை படைத்துள்ளார் மோர்கன். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

cricket news Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment