தடுப்பூசி போடவில்லை என்றால் அனுமதி இல்லை; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் விசா ரத்து
இந்நிலையில் மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வந்த ஜோகோவிச்சை, விசா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, தடுப்பூசி போடாததால், விக்டோரியா மாகாண அரசு அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி விசாவை ரத்து செய்துவிட்டது. அவர் விரைவில் செர்பியா திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Australian Open 2022 Novak Djokovic denied entry to Australia : உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற சூழலில் பலர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். பல சமூக குழுக்கள் தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இது போன்று தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை இல்லாத பிரபலங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு தனிநபரின் விருப்பமாக கருதப்படாலும் நாடு விட்டு மற்றொரு நாட்டுக்கு செல்லும் போது அந்நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் ஏதும் நடைபெற்று விடக் கூடாது என்று பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் உலக நாடுகள் விதித்து வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி என்பதாகும்.
Advertisment
ஆஸ்திரேலியாவில் வருகின்ற 17ம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ள வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க வந்த டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.
கொரோனா தடுப்பு நடத்தைகளை பின்பற்றி நாட்டுக்குள் நுழையும் விதிமுறைகளை அவர் கடைபிடிக்கவில்லை என்பதால் அவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அவர் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிரான மனப்போக்கை கொண்டுள்ளார் என்பதும் இன்னும் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பதும் தான்.
Happy New Year! Wishing you all health, love & joy in every moment & may you feel love & respect towards all beings on this wonderful planet.
I’ve spent fantastic quality time with loved ones over break & today I’m heading Down Under with an exemption permission. Let’s go 2022! pic.twitter.com/e688iSO2d4
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா இல்லையே என்பதைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் அவர் இந்த போட்டிகளில் பங்கேற்பாரா என்பது போன்ற குழப்பங்கள் இருந்தன.இந்நிலையில், ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பதற்கு விலக்கு அளிப்பதாக டென்னிஸ் ஆஸ்திரேலியா நிர்வாகம் நேற்று அறிவித்தது. நம்பர் 1 வீரர் என்ற காரணத்தால் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பது போன்ற பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வந்த ஜோகோவிச்சை, விசா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, தடுப்பூசி போடாததால், விக்டோரியா மாகாண அரசு அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி விசாவை ரத்து செய்துவிட்டது. அவர் விரைவில் செர்பியா திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் வீரருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு செயல்பட்டால் அது மேலும் பல விமர்சனங்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாகும் என்று கூறப்படுகிறது.சிறப்பு அனுமதியில் அவர் உள்ளே வந்திருந்தாலும் கூட தேவையான மருத்துவ சான்றுகளை அவர் கொண்டு வரவில்லை என்பதால் இந்த தடை அறிவிக்கப்படுகிறது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil