Advertisment

43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் : இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வீரருடன் அசத்தல் வெற்றி

இறுதிப் போட்டிக்கு போபண்ணா மற்றும் அவரது ஆஸ்திரேலிய வீரர் எப்டன் ஜோடி அரையிறுதியில், 6-3 3-6 7-6 (10-7) என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஜிசென் மற்றும் செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை தோற்கடித்தனர்.

author-image
WebDesk
New Update
Rohan Bopanna Champaion

இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கோப்பையுடன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவின், ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி, சிமோன் பொலெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவஸ்ஸோரி ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisment

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி இம்மாதம் 28-ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் 43 வயதான ரோஹன் போபண்ணா – ஆஸ்திரேலிய மேத்யூ எப்டன் ஜோடி இறுதிப்போட்டியில், இத்தாலியின் சிமோன் பொலெல்லி - ஆண்ட்ரியா வவஸ்ஸோரி ஜோடியுடன் மோதியது.

ஆங்கிலத்தில் படிக்க : Rohan Bopanna becomes Australian Open champion at 43, wins doubles final with Matthew Ebden

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 7-6(0), 7-5 என்ற கணக்கில் ரோஹன் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இதன் மூலம் ரோஹன் போபண்ணா தனது டென்னிஸ் வாழ்க்கையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் யுஎஸ் ஓபனில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதேபோல், 2017ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் போபண்ணா பெற்றார். மேலும் 43 வயதில், சாம்பியன் பட்டம் வென்றுள்ள போபண்ணா ஆண்கள் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற மிகவும் வயதான வீரர் ஆவார். இதற்கு முன்பு 2022 இல் மார்செலோ அரேவோலாவுடன் இணைந்து ஜீன்-ஜூலியன் ரோஜர் தனது 40 வயதில், பிரெஞ்சு ஓபன் ஆண்கள் இரட்டையர் கோப்பையை வென்றதே அதிக வயதில் சாம்பியன் ஆன வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.

ராட் லாவர் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. போட்டியின் இரண்டாவது செட்டின் 11வது ஆட்டத்தில் வவாஸ்ஸோரி தனது சர்வீஸை கைவிட்டதே இந்த போட்டியில் நடந்த ஒரே ஒரு சர்வீஸ் பிரேக் ஆகும். போட்டியின் தொடக்கத்தில் இரண்டாவது சீட்டுகள் அடுத்தடுத்த ஆட்டங்களில் பிரேக் பாயின்ட்களைக் எடுத்திருந்தது, ஆனாலும், இத்தாலிய ஜோடி சம நிலையில் இருக்க கடுமையாக போராடியது.

இரண்டாவது ஆட்டத்தில், பொலெல்லியின் சர்வீஸில், வவஸ்ஸோரி 30-30 என்ற கணக்கில் ஒரு சமன் செய்திருந்தாலும், போபண்ணா அடுத்தடுத்து பதிலடி கொடுத்திருந்தார். நான்காவது ஆட்டத்தில், இத்தாலிய ஜோடி, மீண்டும் ஒரு பிரேக் பாயிண்டில் இறங்கினர், அப்போது 30-30 என்ற நிலையில், போபண்ணாவின் ரிட்டர்ன் நெட் கோர்டில் இருந்து இரண்டாவது சீட்களுக்கு ஒரு இலவச புள்ளியைக் கொடுத்தது.

11வது ஆட்டத்தில் எப்டனின் சர்வீஸ் அழுத்தம் ஏற்பட்டாலும், அவர் ஒரு பிரேக் பாயிண்டை எதிர்கொண்டார், ஆனால், டியூஸ் புள்ளிகளை விளையாடிய பிறகு, எப்டன் சிறப்பாக முடித்திருந்தார். டை-பிரேக்கரில், பொலெல்லியின் சர்வீஸ் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டாலும், இரண்டாவது செட்கள் தங்கள் சர்வீஸில் ஒரு புள்ளியை இழக்காமல் 5-0 என முன்னிலை பெற்றனர். இறுதியில், வவஸ்ஸோரியும் தனது சர்வீஸை இழந்ததால் போட்டியாளர்கள் ஆறு செட் புள்ளிகளை பெற்றதால் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rohan Bopanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment