ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமறங்கிய, அரினா சபலென்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க வீரங்கனை மேடிசன் கீஸ், 6-3 2-6 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
Read In English: Australian Open 2025: Madison Keys stuns Aryna Sabalenka to win her first Grand Slam title
உலகின் முன்னணி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி, ஜனவரி 12-ந் தேதி தொடங்கியது. இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 2023 மற்றும் 2024-ம் ஆண்டு தொடர்ந்து இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற, உலகின் நம்பர் ஒன் வீரங்கனையாகன அரினா சபவென்கா ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 6-3 2-6 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற மேடிசன் கீஸ்,சபலென்காவின் ஹாட்ரிக் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடரின் அரையிறுதி போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்குடன் மேட்ச் பாயிண்டில் பின்தங்கிய கீஸ், 2009 இல் உலகின் நம்பர் 1 மற்றும் உலகின் நம்பர் 2 இல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பில் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்திய முதல் வீராங்கனை ஆனார்.
2023-ம் ஆண்டு, யுஎஸ் ஓபன் அரையிறுதிக்குப் பிறகு, சபலென்காவுக்கு எதிராக மூன்று செட்களில் தோல்வியடைந்த கீஸ் கண்ணீர்விட்ட நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு, தனது முதல் மேஜர் போட்டிக்கான நீண்ட காத்திருப்பை வெற்றியுடன் முடித்துள்ளார். முன்னதாக 2017-ம் ஆண்டு, அவர் யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியை எட்டினார்.
தற்போது ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்றுள்ள 29 வயதான மேடிசன் கீஸ், ஃபிளேவியா பென்னெட்டா, ஆன் ஜோன்ஸ் மற்றும் பிரான்செஸ்கா ஷியாவோனுக்குப் பிறகு தொழில்முறை சகாப்தத்தில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4-வது வயதான வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். அமெரிக்காவின் 19வது நிலை வீராங்கனையான இவர், நெட் கார்டு வெற்றியாளருக்குப் பிறகு தனது அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தினார்.