மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 7ஆவது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இருந்து 7 ஆவது லீக் ஆட்டம் வரை ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக தோல்வியே காணாமல் வெற்றி கண்டு வருகிறது.
இன்று வங்கதேசம்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெலிங்கடனில் நடைபெற்றது. மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை சேர்த்தது. பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 32.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி கண்டது.
ஆஸி., வீராங்கனை பெத் மூனி அரை சதம் பதிவு செய்து ஆட்டத்தின் வெற்றிக்கு வழிவகை செய்தார். அவரே பிளேயர் ஆஃப் த மேட்ச் விருதையும் தட்டிச் சென்றார். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடிய ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி பெறாமல் 14 புள்ளிகளுடன் ஆஸி., மகளிர் முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது ஒரு பயணம்-ரிஷப் பண்ட்
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது ஒரு பயணம் அது முடிவு கிடையாது என்று டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முதல் முறையாக நான் வந்தபோது மிக அதிக நம்பிக்கையை கொண்டிருந்தேன். நாங்கள் டீமை எவ்வளவோ மாற்றியிருக்கிறோம். இந்த டீமில் நான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அனைவரிடமும் நான் கற்றுக் கொண்டேன். பட் கம்மின்ஸ், ஷமி, ரபாடா ஆகியோர் இந்த அணியில் இருந்தனர்.
அவர்களது பந்துவீச்சில் வலை பயிற்சியின்போது விளையாடியிருக்கிறேன். மிக அதிகமாக அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அதுவே என்னை கேப்டன் பொறுப்பிற்கு அழைத்து வந்திருக்கிறது என்கிறார் ரிஷப் பன்ட்.
சிஎஸ்கே வீரருக்கு தீர்ந்தது விசா பிரச்சனை
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 34 வயது இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு ‘விசா’ கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்தியா வருவதில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் ‘விசா’ கிடைத்தது. இதையடுத்து அவர் இந்தியாவுக்கு புறப்பட்டார். இங்கு 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இணைவார்.
தாமதம் காரணமாக நாளை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தை தவறவிடும் மொயீன் அலி வருகிற 31-ந் தேதி நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சதம் பதிவு செய்த ஆஸி., வீரர்
பாகிஸ்தானில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.
மூன்று டெஸ்ட், 3 ஒரு நாள், ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதுவரை 2 டெஸ்ட் ஆட்டங்கள் நடந்துமுடிந்துள்ளன. இரு ஆட்டமுமே டிரா ஆனது. இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தின் கடைசி நாள் இன்று ஆகும்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் 268 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் விளையாடிய ஆஸி., தனது இரண்டாவது இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸி., தரப்பில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் கவாஜா அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார். இந்த டெஸ்ட் தொடரில் கவாஜா சிறப்பாக விளையாடி வருகிறார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் டிக்ளேர் செய்யும் வரை விளையாடினார்.
தல to ஜட்டு: கேப்டன் பதவி திடீர் மாற்றத்திற்கு ரியாக்ஷன் என்ன?
வார்னர் அரை சதம் பதிவு செய்தார். 351 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இமாம்-உல்-ஹக் அரை சதம் பதிவு செய்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இன்னும் 186 ரன்கள் எடுப்பதற்கு போராடி வருகிறது. இந்த ஆட்டமும் டிரா ஆக வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “