ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 19 முதல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Three Indian-origin girls named in Australia’s U19 women’s squad
இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் அணியில் ரிப்யா சியான், சமரா துல்வின் மற்றும் ஹஸ்ரத் கில் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த முத்தரப்பு தொடர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை உள்ளாக்கிய தொடராக இருக்கும். 14 நாட்கள் நடைபெறும் இந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா நான்கு டி20 மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான 15 வீராங்கனைகள் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டன் பீம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
"ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை மற்றும் இந்திய பாரம்பரியத்துடன் கூடிய வீராங்கனைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்களின் சேர்க்கை பிரதிபலிக்கிறது" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3 இந்திய வம்சாவளி வீராங்கனைகள் யார்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிபியா சியான் விக்டோரியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வீராங்கனை ஆவார். சமரா டல்வின் சிறப்பாக பேட்டிங் ஆடக்கூடிய வீராங்கனை ஆவார். இவர் இதற்கு முன்பு இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா பெண்கள் யு-19 அணிக்காக விளையாடியுள்ளார். ஹஸ்ரத் கில் பந்துவீச்சு வீராங்கனை ஆவார். இவர் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான யு-19 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய யு-19 பெண்கள் டி20 அணி: போனி பெர்ரி, கயோம்ஹே ப்ரே, எல்லா பிரிஸ்கோ, மேகி கிளார்க், சமாரா டல்வின், லூசி ஃபின், ஹஸ்ரத் கில், லூசி ஹாமில்டன், ஆமி ஹண்டர், எலினோர் லாரோசா, இன்ஸ் மெக்கியோன், ரிப்யா ஸியான், டீகன் வில்லியாம்சன், டீகன் வில்லியாம்சன், ஹேலி ஜாச்.
ஆஸ்திரேலிய யு-19 பெண்கள் ஒருநாள் அணி: போனி பெர்ரி, கயோம்ஹே பிரே, எல்லா பிரிஸ்கோ, மேகி கிளார்க், சமாரா டல்வின், லூசி ஃபின், ஹஸ்ரத் கில், ஆமி ஹண்டர், எலினோர் லரோசா, இன்ஸ் மெக்கியோன், ஜூலியட் மார்டன் (என்.எஸ்.டபிள்யூ) ரிப்கன்யாம்யான், ரிப்கன்யாம்யான் வொர்த்லி, ஹேலி ஜாச்.
டி20 முத்தரப்பு தொடர்:
• 19 செப்டம்பர் - டி20 - ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து- ஆலன் பெட்டிக்ரூ ஓவல் - மதியம் 1:30
• 20 செப்டம்பர் - டி20 - நியூசிலாந்து vs இலங்கை - ஆலன் பெட்டிக்ரூ ஓவல் - மதியம் 1:30
• 22 செப்டம்பர் - டி20 - ஆஸ்திரேலியா vs இலங்கை - இயன் ஹீலி ஓவல் - மாலை 6:00 மணி
• 24 செப்டம்பர் – டி20 – ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து –பில் பிப்பன் ஓவல் – மதியம் 1:30 மணி
• 25 செப்டம்பர் – டி20 – ஆஸ்திரேலியா vs இலங்கை – பில் பிப்பன் ஓவல் – மதியம் 1:30 மணி
• 26 செப்டம்பர் – டி20 – நியூசிலாந்து vs இலங்கை – பில் பிப்பன் ஓவல் – மதியம் 1:30 மணி
50 ஓவர் முத்தரப்பு தொடர்:
• 30 செப்டம்பர் - 50 ஓவர் - ஆஸ்திரேலியா vs இலங்கை - ஆலன் பெட்டிக்ரூ ஓவல் - காலை 9:30 மணி
• அக்டோபர் 1 - 50 ஓவர் - நியூசிலாந்து vs இலங்கை - ஆலன் பெட்டிக்ரூ ஓவல் - காலை 9:30
• அக்டோபர் 2 - 50 ஓவர் - ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - இயன் ஹீலி ஓவல் - மதியம் 2:30.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“