Advertisment

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா... பாரிசில் அவனி லேகரா, மோனா அகர்வால் அசத்தல்!

8 வீராங்கனைகள் பங்கேற்ற பாரிஸ் பாரா ஒலிம்பிக் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Avani Lekhara wins gold Mona Agarwal claims bronze in 10m air rifle final Paris Paralympics 2024 shooting Tamil News

இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Avani Lekhara wins gold, Mona Agarwal claims bronze in 10m air rifle final

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தென் கொரியா வீராங்கனை லீ யுன்ரி 246.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

இந்தப் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Paralympics Paris 2024 Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment