Advertisment

விராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்! எதிர்கால சாம்பியன் ரெடி

பாகிஸ்தான் வீரர் பாபர் அசம், ஒருநாள் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 11 சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியை ஓவர் டேக் செய்து பாபர் அசம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Babar Azam overtakes Virat Kohli, 3rd quickest to 11 ODI hundreds - சாதனைகளே முறியடிக்கத்தானே! விராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்! எதிர்கால சாம்பியன் ரெடி

Babar Azam overtakes Virat Kohli, 3rd quickest to 11 ODI hundreds - சாதனைகளே முறியடிக்கத்தானே! விராட் கோலியை விஞ்சிய பாபர் அசம்! எதிர்கால சாம்பியன் ரெடி

பல கட்ட எதிர்ப்புகள், போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது.

Advertisment

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. துணைக் கேப்டன் பாபர் அசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய பாபர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் குணதிலகா (14), அவிஷ்கா பெர்னாண்டோ (0), திரிமானே (0), பெர்னாண்டோ (1) தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பல வருடங்களுக்கு பிறகு, தனது தாய் மண்ணில் வெற்றியை ருசித்தது.

விராட் கோலி சாதனையை விஞ்சிய பாபர் அசம்

இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம், ஒருநாள் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 11 சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலியை ஓவர் டேக் செய்து பாபர் அசம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 11 சதம் அடித்த வீரர்கள்:

ஹசிம் ஆம்லா - 64 இன்னிங்ஸ்

குயிண்டன் டி காக் - 65 இன்னிங்ஸ்

பாபர் அசம் - 71 இன்னிங்ஸ்

விராட் கோலி - 82 இன்னிங்ஸ்

ஷிகர் தவன்/ டேவிட் வார்னர் - 86 இன்னிங்ஸ்

ஆரோன் பின்ச் - 88 இன்னிங்ஸ்.

கடந்த நான்கைந்து வருடங்களின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் முன்னிலையில் இருப்பவர் பாபர் அசம் மட்டுமே. ஒருநாள் போட்டியானாலும் சரி, டி20யானாலும் சரி, இவரது மெச்சூர்ட் அணுகுமுறை நம்மை வியக்க வைக்கிறது. 25 வயதே ஆன இளம் வீரர் என்றாலும், தேவையில்லாமல் சவடால் விடுவது, முறைப்பது, எதிரணி வீரர்களை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல் முழுக்க முழுக்க தனது பேட்டால் மட்டுமே பதில் அளித்து வருவதன் மூலம், எதிர்கால பாகிஸ்தான் கேப்டனாகவும் பாபரை பார்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Virat Kohli Babar Azam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment